தில்லியில் கனிமொழி தலைமையில் பேரணி
மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரி தில்லியில் கனிமொழி தலைமையில் பேரணி நடத்தப்பட்டது.


மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரி தில்லியில் கனிமொழி தலைமையில் பேரணி நடத்தப்பட்டது.
நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை விரைவாக நிறைவேற்ற வலியுறுத்தி இன்று தில்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக திமுக எம்.பி. கனிமொழி அறிவித்திருந்தார். அதன்படி தில்லியில் கனிமொழி எம்.பி. தலைமையில் இன்று பேரணி நடத்தப்பட்டது. இந்தப் பேரணியில் திமுக மகளிரணியினர் உட்பட ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.
பேரணியில் பங்கேற்றவர்கள் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரி கோஷங்கள் எழுப்பினர். தில்லி மண்டிஹவுஸில் தொடங்கிய இந்தப் பேரணி ஜந்தர்மந்தரில் முடிவடைந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...