மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காஷ்மீரில் அமைச்சர் வீட்டின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்

காஷ்மீரில் அமைச்சர் வீட்டின் மீது பயங்கரவாதிகள் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :27 மார்ச் 2017, 11:44 am

தினமணி

காஷ்மீரில் அமைச்சர் வீட்டின் மீது பயங்கரவாதிகள் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீர் மாநிலம், அனந்த்நாக் மாவட்டத்தில் வசித்து வருபவர் சையது பரூக்.  மக்கள் ஜனநாயக கட்சித் தலைவரான இவர் ஹஜ் மற்றும் வகுப்பு வாரிய துறை அமைச்சராகவும் பதவி வகிக்கிறார். இந்நிலையில் நேற்று மாலை இவரது வீட்டின் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் ஒருவர் காயமடைந்தார். தாக்குதலின் போது அமைச்சர் சையது பரூக் வீட்டில் இல்லாத காரணத்தால் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. இத்தாக்குதலையடுத்து அமைச்சர் வீட்டைச் சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அமைச்சர் வீட்டின் மீதே தாக்குதல் நடைபெற்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய மற்றும் தெற்கு காஷ்மீரில் நேற்று மட்டும் மூன்று பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.