புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

ம.பி.: குழந்தைகளுக்கு எதிரான கொடிய குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்க மசோதா

மத்தியப் பிரதேசத்தில் குழந்தைகளுக்கு எதிரான கொடிய குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்க வழி வகுக்கும் சட்டத்தைக் கொண்டு வர மாநில அரசு முடிவு செய்துள்ளது.

News image
Updated On :2 நவம்பர் 2017, 8:00 pm

DIN

மத்தியப் பிரதேசத்தில் குழந்தைகளுக்கு எதிரான கொடிய குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்க வழி வகுக்கும் சட்டத்தைக் கொண்டு வர மாநில அரசு முடிவு செய்துள்ளது. போபாலில் நடைபெற்ற மத்தியப் பிரதேச மாநில நிறுவன தின (நவம்பர் 1) நிகழ்ச்சியில் அந்த மாநில முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:
அடுத்து நடைபெறவுள்ள மத்தியப் பிரதேச மாநில குளிர்கால சட்டப் பேரவைக் கூட்டத்தில் பொதுப் பாதுகாப்பு மசோதா அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதில், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை உள்ளிட்ட கொடிய குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வழி செய்யப்படும். இதன் மூலம் மாநிலத்தின் குழந்தைகளின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதிப்படுத்தும்.
விவசாயிகள் உற்பத்தி செய்யும் தானியங்களின் விலை குறைந்தபட்ச ஆதரவு விலையை விடக் குறையும்போது, அவர்களுக்கு நிதி அளிப்பதற்காக பாவாந்தார் புக்தான் யோஜனா திட்டத்தை மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தவறான செய்திகளைப் பரப்பி குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர். விவசாயிகள் யாரும் அதனை நம்ப வேண்டும். வேளாண் பொருள்களின் விலை, குறைந்தபட்ச ஆதரவு விலையைவிடக் குறைந்தால், இரண்டுக்கும் உள்ள வித்தியாசத் தொகையை மாநில அரசு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யும் என்றார் செளஹான்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.