காப்பகங்களில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதைத் தடுப்பதற்காக, பெரிய அளவில் ஒரே காப்பகத்தை மாநிலங்கள் அமைக்க வேண்டும் என்று மத்திய மகளிர் மேம்பாடு மற்றும் குழந்தைகள் நலத் துறைஅமைச்சர் மேனகா காந்தி அறிவுறுத்தியுள்ளார்.
பிகார் மாநிலம், முசாஃபர்பூரிலும், உத்தரப் பிரதேச மாநிலம், தேவ்ரியா நகரிலும் அரசின் நிதியுதவிடன் தன்னார்வ அமைப்புகள் நடத்தும் காப்பகங்களில் சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார்கள் வந்துள்ள நிலையில், மேனகா காந்தி இவ்வாறு கூறியுள்ளார்.
இதுதொடர்பாக, தில்லியில் செய்தியாளர்களிடம் அவர் திங்கள்கிழமை மேலும் கூறியதாவது: அரசின் நிதியுதவியுடன் காப்பகங்கள் நடத்தி வரும் சிலர், அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்வதாகவும், அவர்களை தவறாகப் பயன்படுத்துவதாகவும் புகார்கள் வந்துள்ளன. இதுபோன்ற சம்பவங்களைத் தடுப்பதற்காக, அனைத்து சிறார்களையும், சிறுமிகளையும் ஒரே இடத்தில் தங்க வைக்கும் வகையில் மிகப்பெரிய அளவில் ஒரு காப்பகத்தை மாநில அரசுகளே கட்டமைக்க வேண்டும். அரசின் செலவில் நடத்தப்படும் அந்த காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருப்பவர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
தவிர்க்க இயலாத நேரத்தில், சிறார் நலத் துறையின் ஒப்புதல் பெற்ற பிறகு, பெண்களும், சிறார்களும் தற்காலிக காப்பகங்களில் தங்க வைக்கப்படலாம். பிறகு, அவர்கள், மாநில அரசின் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். அந்த காப்பகங்களை கட்டுவதற்கான நிதியுதவி வழங்குவதற்கு மகளிர் மேம்பாடு அமைச்சகம் தயாராக இருக்கிறது என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வங்கி மேலாளரை தாக்கிய வழக்கு: மு.க.அழகிரி மகள் கைதாகி பிணையில் விடுவிப்பு

குடிநீா் விநியோகம் கோரி பெண்கள் சாலை மறியல்

குடிநீருடன் கழிவுநீா் கலப்பு: மக்கள் மனு

நெல்லை அருகே சிக்னல் கோளாறு: நடுவழியில் நின்ற ரயிலால் பயணிகள் அவதி
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi



