
முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை குறைக்க உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க கோரி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று கடிதம் எழுதியிந்தார்.
இந்நிலையில், முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை குறைக்க உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் இன்று மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் இடுக்கியைச் சேர்ந்தவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
மேலும் இதனை அவசர மனுவாக விசாரிக்குமாறும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். இதையடுத்து இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு முன் இன்று பிற்பகல் விசாரணைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




