கேரளாவில் ஏற்பட்ட பெரும் மழையால் உண்டான வெள்ளத்தில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கானோர் வீடுகளையும், வாழ்வாதாரங்களையும் இழந்தனர்.
வெள்ளம் சூழ்ந்த கேரளாவில் தேசிய பேரிடர் மீட்புப் படை, முப்படை வீரர்கள் என மீட்புப் பணிகள் துரித வேகத்தில் நடந்தது.
ஹெலிகாப்டர்கள் மூலமாகவும், படகுகள் மூலமாகவும் வெள்ளத்தில் சிக்கியவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
மீட்புக் காட்சிகளும், வெள்ளம் கரைபுரண்டு ஓடும் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியதால் நிவாரண உதவிகளும் கேரளாவுக்கு அதிக அளவில் சென்றடைந்து வருகின்றன.
இந்த நிலையில், மீட்புப் படையினரால் ஒரு வீட்டுக்குள் சிக்கியிருந்த 2 பெண்கள் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், மீட்புக் குழுவுக்கு நன்றி செலுத்தும் விதமாக வீட்டின் மொட்டை மாடியில் வெள்ளை நிற பெயிண்டால் தேங்க்ஸ் என்று எழுதி தங்களது நன்றியை பறைசாற்றினர் குடும்பத்தினர்.
#OpMadad #KeralaFloodRelief #KeralaFloods2018 A Thank You note painted on the roof of a house where the Naval ALH piloted by Cdr Vijay Varma rescued two women. Bravo... pic.twitter.com/xsaD1RfeIk
â SpokespersonNavy (@indiannavy) August 20, 2018
இந்த புகைப்படம் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










