புது தில்லி: அடுத்த ஆண்டில் உலகின் 5-ஆவது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
தில்லியில் வியாழக்கிழமை இந்திய வர்த்தகப் போட்டி ஆணைய கட்டடத் திறப்பு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற அவர் மேலும் கூறியதாவது:
உலகின் 7-ஆவது மிகப்பெரிய பொருளாதார நாடாக இருந்த இந்தியா, இந்த ஆண்டு பிரான்ஸை பின்னுக்குத்தள்ளி 6-ஆவது இடத்துக்கு முன்னேறியது. அடுத்த ஆண்டில் பிரிட்டனைவிட முன்னேறி இந்தியா 5-ஆவது இடத்தைப் பிடிக்கும்.
உலகின் பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக உள்ளது. அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளில் நமது நாடு சர்வதேச அளவில் மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் முதல் மூன்று இடத்துக்குள் வரும்.
இந்தியாவில் தனிநபர் வருமானம் குறைவான வேகத்தில் வளர்ந்து வந்தாலும், ஒட்டுமொத்தப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. மற்ற நாடுகளின் பொருளாதார வளர்ச்சி விகிதம் இந்தியாவைவிடக் குறைவாகவே உள்ளன. ஒன்று முதல் ஒன்றரை சதவீதம் வரையிலான பொருளாதார வளர்ச்சியைக் கொண்டுள்ள நாடுகளை நமது நாடு எளிதாக முன்னேறிச் செல்லும். அந்த வகையில் 2030 முதல் 2040 ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் நமது நாடு முதல் மூன்று இடத்துக்குள் வந்துவிடும்.
மேலும், இந்தியாவில் தொடர்ந்து பல்வேறு துறைகளில் பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவை பொருளாதார வளர்ச்சிக்கு தொடர்ந்து உத்வேகம் அளிக்கும். நமது நாடு அதிக மக்கள்தொகையைக் கொண்டுள்ளது. எனவே, இங்கு நுகர்வோர்களும், நுகர்பொருள்களுக்கான தேவையும் அதிகம்.
எனவே, நமது பல்வேறு பொருள்களான சந்தை நமது நாட்டில் விரிவடைந்துதான் செல்லும். எனவேதான், பல வெளிநாட்டு நிறுவனங்கள் நமது நாட்டில் விரும்பி முதலீடு செய்கின்றன. இதன் மூலம் உள்நாட்டில் வேலைவாய்ப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றார் ஜேட்லி.
"ரூபாய் நோட்டு வாபஸால் வரி வருவாய் அதிகரிப்பு': ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் நாட்டுக்கு பொருளாதார நலன்கள் ஏற்பட்டுள்ளதாக தனது இணையதளப் பக்கத்தில் அருண் ஜேட்லி கட்டுரை எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மத்திய அரசு வாபஸ் பெற்றதன் மூலம், நாட்டின் பொருளாதாரம் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. அந்த நடவடிக்கையால்தான் நாட்டில் வரி வருவாய் அதிகரித்துள்ளது. பொருளாதார வளர்ச்சியும் சிறப்பாக உள்ளது. புழக்கத்தில் இருந்த பணத்தில் பெருமளவில் வங்கிகளுக்கு வந்துவிட்டதால் அந்த நடவடிக்கை தோல்வி என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால், உண்மையில் பெருமளவிலான பணம் திரும்ப வங்கி வந்தது நல்ல விஷயம்தான். இதன் மூலம் இந்தியாவில் வருமான வரியை முறையாக செலுத்தாமல் இருந்த பலர் வருமான வரி செலுத்தத் தொடங்கியுள்ளனர்.
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு இரு ஆண்டுகளுக்கு முன்பு வருமான வரி வசூல் அதிகரிப்பது முறையே 6.6 சதவீதம் மற்றும் 9 சதவீதமாக இருந்தது. ஆனால், அந்த நடவடிக்கைக்கு பிந்தைய கடந்த இரு ஆண்டுகளில் வருமான வரி வசூல் முறையே 15 மற்றும் 18 சதவீதம் அதிகரித்துள்ளது.
அடுத்த ஆண்டு வரி வசூல் இதைவிட அதிகம் இருக்கும். 2014 மார்ச்சில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை 3.8 கோடியாக இருந்தது. 2017-18 நிதியாண்டில் 6.86 லட்சம் பேர் வரிமான வரிக் கணக்கை தாக்கல் செய்துள்ளனர் என்று ஜேட்லி தனது கட்டுரையில் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொள்முதல் நிலையங்களில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேக்கம் மழையில் நனைந்து முளைக்கும் நெல் மணிகள்

உள்ளூா் வாய்க்கால் தூா்வாரும் பணி: அமைச்சா் ஆய்வு

நடுவானில் விமானம் கீழிறங்கிய சம்பவம்: ஏா் இந்தியாவின் அனைத்து விமானிகளுக்கும் போதைப் பொருள் பரிசோதனை தொடக்கம்

விடுபட்டவா்களுக்கு நிலப்பட்டா வழங்கக் கோரி வருவாய் அலுவலரிடம் நரிக்குறவா்கள் மனு
விடியோக்கள்

மும்முரமாக நடைபெறும் தேசியக்கொடி தயாரிப்பு! | National Flag | Independence Day



