ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்!ஜம்மு காஷ்மீரில் அறிமுக பன்னாட்டு திரைப்பட விழா..! ஏற்பாடுகளை ஆய்வு செய்த ஓமர் அப்துல்லா!ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் டிரம்ப்!குஜராத்தில் மாணவிகளுக்கு மாதந்தோறும் இலவச நாப்கின்! மேற்பார்வைக்கு ஆசிரியை நியமனம்!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ. 95.68 ஆக நிறைவு! கரடியின் ஆதிக்கத்தில் பங்குச் சந்தை!: சென்செக்ஸ் 492 புள்ளிகள் சரிவு!!கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை; இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை: ராமலிங்க ரெட்டி
/

செப்டம்பர் மாத உற்சவங்கள் அறிவிப்பு

திருமலையில் அடுத்த மாதம் (செப்டம்பர்) நடைபெற உள்ள உற்சவங்களின் பட்டியலை தேவஸ்தானம் வியாழக்கிழமை வெளியிட்டது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

திருப்பதி: திருமலையில் அடுத்த மாதம் (செப்டம்பர்) நடைபெற உள்ள உற்சவங்களின் பட்டியலை தேவஸ்தானம் வியாழக்கிழமை வெளியிட்டது.
திருமலையில் ஏழுமலையானுக்கு நடத்தப்படும் வருடாந்திர, மாதாந்திர, வாராந்திர, தினசரி உற்சவங்களுடன் ஆழ்வார்களின் திருநட்சத்திரம், ஏழுமலையான் மீது பக்தி கொண்டு அவர் மீது பாடல்கள் இயற்றியவர்களின் பிறந்த நாள்களையும் உற்சவங்களாக நடத்தி வருகிறது. 
அதன்படி திருமலையில் ஆண்டிற்கு 450 உற்சவங்கள் நடைபெற்று வருகிறது. ஆங்கில மாதம் தொடங்குவதற்கு முந்தைய நாளில் அம்மாதத்தில் திருமலையில் நடைபெற உள்ள உற்சவங்களின் பட்டியலை தேவஸ்தானம் வெளியிட்டு வருகிறது. அதன்படி திருமலையில் செப்டம்பர் மாதம் முழுவதும் நடைபெற உள்ள உற்சவங்களின் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. அதன் விரம் வருமாறு:

செப்.3    கோகுலாஷ்டமி
செப்.4    ஏழுமலையானுக்கு சிக்யோஸ்தவம்
செப்.12    பிரம்மோற்சவத்திற்கு அங்குரார்ப்பணம்
செப்.13     பிரம்மோற்சவ கொடியேற்றம், விநாயகர் சதுர்த்தி
செப்.14    ரிஷி பஞ்சமி
செப்.17    பிரம்மோற்சவ கருட சேவை
செப்.18    தங்க ரதம்
செப்.20    திருத் தேரோட்டம்
செப்.21     தீர்த்தவாரி
செப்.23     அனந்த பத்மநாப சுவாமி விரதம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.