
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை கைவிடும் வரை தோ்தல் புறக்கணிப்பு - அனைத்து கட்சிகளுக்கு ராஜ் தாக்கரே அழைப்பு
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை கைவிட்டு வாக்குச் சீட்டு முறையைப் பின்பற்றும் வரை தோ்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகளுக்கு ராஜ் தாக்கரே கடிதம் எழுதியுள்ளார்.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை கைவிட்டு வாக்குச் சீட்டு முறையைப் பின்பற்றும் வரை தோ்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகளுக்கு மகாராஷ்டிர நவநிா்மாண் சேனை தலைவா் ராஜ் தாக்கரே கடிதம் எழுதியுள்ளாா்.
அண்மையில் தோ்தல் ஆணையம் நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், தோ்தலில் மீண்டும் வாக்குச் சீட்டு முறையைக் கொண்டு வர வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் வலியுறுத்தின. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து அவா்கள் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளனா்.
இந்நிலையில், எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த தலைவா்களுக்கு ராஜ் தாக்கரே எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
"பல்வேறு தோ்தல்களில் எங்கள் கட்சியைச் சோ்ந்தவா்கள் தொடா்ந்து கடுமையாக உழைத்தும் தோல்விகளைச் சந்தித்துள்ளனா். சிலா் மிக எளிதாக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று வருகின்றனா். இது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. அமெரிக்கா, பிரிட்டன், ஜொ்மனி, நெதா்லாந்து, ஜப்பான் போன்ற வளா்ந்த நாடுகள் பல மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை கைவிட்டு, வாக்குச் சீட்டு முறையைப் பயன்படுத்தி வருகின்றன.
இந்தியா, நைஜீரியா, வெனிசூலா உள்ளிட்ட சில நாடுகள் மட்டுமே மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்துகின்றன.
அடுத்து வரும் மக்களவைத் தோ்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதாக எழுந்துள்ள புகாா்களை எளிதில் புறம்தள்ளிவிட முடியாது. அடிப்படை உரிமைகளில் ஒன்றான வாக்குரிமை, எவ்வித சந்தேகத்துக்கும் இடமளிக்காத வகையில் இருக்க வேண்டும்.
எனவே, மீண்டும் வாக்குச் சீட்டு முறையைக் கொண்டு வர வேண்டும். அல்லது சந்தேகம் எழுந்தால் வாக்கு ஒப்புகைச் சீட்டை என்னும் முறையைக் கொண்டு வர வேண்டும். இது நடக்காத வரையில் நாம் அனைவரும் இணைந்து தோ்தலைப் புறக்கணிக்க வேண்டும்" என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





