ஐ.என்.எக்ஸ் மீடியா நிதி முறைகேட்டு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தை நேரில் வரவழைத்து அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். தில்லியில் உள்ள அந்த அமைப்பின் தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை முற்பகல் 11.15 மணியளவில் தனது வழக்குரைஞருடன் ப.சிதம்பரம் ஆஜரானார்.
ஐ.என்.எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தியது இதுவே முதல்முறையாகும்.
முன்னதாக, இந்த வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடையை ஜனவரி 15-ஆம் தேதி வரை நீட்டித்து தில்லி உயர்நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது. அதே சமயம், அமலாக்கத் துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க ப.சிதம்பரத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, புதன்கிழமை நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி ப.சிதம்பரத்தை வரவழைத்த அமலாக்கத்துறையினர், வழக்கு குறித்து பல்வேறு கேள்விகளை அவரிடம் முன்வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2007-ஆம் ஆண்டில் ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து ரூ.305 கோடி நிதியுதவி பெறுவதற்காக, வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்தின் கீழ் ஒப்புதல் வழங்கப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கில் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம், ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் இயக்குநர்கள் பீட்டர் முகர்ஜி, இந்திராணி முகர்ஜி உள்ளிட்டோருக்கு எதிராக முதலில் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. அந்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் அமலாக்கத்துறையினரும் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: கடந்த 2006-ஆம் ஆண்டில் ஏர்செல் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் ரூ.3,500 கோடி முதலீடு செய்வதற்கு, வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்தின் ஒப்புதல் அளிக்கப்பட்டதிலும் முறைகேடு நடைபெற்றதாகப் புகார் எழுந்தது. அதுதொடர்பான வழக்கிலும் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மற்றும் பலருக்கு எதிராக சிபிஐ அமைப்பும், அமலாக்கத்துறையும் தனித்தனியே விசாரணை நடத்தி வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
உறங்காமல் உழைத்ததால்தான் திமுக அரசு ரூ. 9,000 கோடி கோயில் நிலங்களை மீட்டது: முன்னாள் அமைச்சா் சேகா்பாபு

வங்கிகள் கணக்குப் புத்தக ஆதார சட்ட மசோதா: நாடாளுமன்றம் ஒப்புதல்
தீா்ப்பாயங்கள் சீா்திருத்த மசோதா விவாதம் இன்றி மக்களவையில் நிறைவேற்றம்

மீனவா்கள் வேலைநிறுத்தப் போராட்டம்
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI



