ஹனுமன் தலித்தா? முஸ்லிமா? உத்தரப்பிரதேச அமைச்சரின் புதிய விளக்கம்

ஹனுமன் தலித் என்றும், இல்லை இல்லை  முஸ்லிம் என்றும், இல்லவே இல்லை பிராமின் என்றும் பல்வேறு சர்ச்சைகள் புதிது புதிதாக முளைத்துள்ளன.
ஹனுமன் தலித்தா? முஸ்லிமா? உத்தரப்பிரதேச அமைச்சரின் புதிய விளக்கம்
Updated on
1 min read


லக்னௌ: ஹனுமன் தலித் என்றும், இல்லை இல்லை  முஸ்லிம் என்றும், இல்லவே இல்லை பிராமின் என்றும் பல்வேறு சர்ச்சைகள் புதிது புதிதாக முளைத்துள்ளன.

இந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தின் மத நல்லிணக்கத் துறை அமைச்சர் லஷ்மி நாராயண் சௌத்ரி இந்த சர்ச்சையில் இணைந்துள்ளார்.

அதாவது, இந்துக் கடவுளான ஹனுமனின் குண நலன்களைப் பார்க்கும் போது அவர் ஜாத் சமுதாயத்தைச் சேர்ந்தவராகவே இருப்பார் என்று அவர் கூறியுள்ளார்.

ஹனுமன்ஜி ஜாத் சமுதாயத்தைச் சேர்ந்தவராக இருப்பார் என்றே நான் கருதுகிறேன். ஒரு பிரச்னையாக இருந்தாலும், பிரச்னையில் இருக்கும் மக்களாக இருந்தாலும் ஜாத் சமுதாய மக்கள் உடனடியாக அங்கே வந்துவிடுவார்கள். இதையேதான் ராமாயணத்தில் ஹனுமன் தனது தொண்டர் படையோடு வந்து ராமருக்கு உதவியதில் தெரிந்தது என்கிறார்.

முன்னதாக, உத்தரப்பிரதேச பாஜக உறுப்பினர் ஒருவர் பேசுகையில், ஹனுமனின் அடையாளங்களைப் பார்க்கும் போது அவர் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தவராகவே இருப்பார் என்று கூறினார்.

முன்னதாக, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேரணியில் பேசும்போது, ஹனுமன் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com