போகிபீல்: அஸ்ஸாம் மாநிலம் திப்ருகார் அருகே போகிபீல் என்ற இடத்தில் பிரம்மபுத்திரா நதிக்குக் குறுக்கேக் கட்டப்பட்ட இந்தியாவின் மிக நீளமான ரயில் மற்றும் வாகன மேம்பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
புது தில்லியில் இருந்து மதியம் திப்ருகார் வந்த மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் போகிபீல் சென்று பிரம்மபுத்திரா நதியின் தென்கரையில் அமைக்கப்பட்டுள்ள சுமார் 4.94 கி.மீ. நீளமுள்ள இரண்டு அடுக்கு மேம்பாலத்தை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில்,மோடியுடன் அஸ்ஸாம் ஆளுநர் ஜக்தீஷ் முகி, முதல்வர் சர்பானந்தா சோனோவால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேம்பாலத்தைத் திறந்து வைத்த பிறகு தலைவர்கள் அனைவரும் சில மீட்டர்கள் நடந்து சென்று பார்வையிட்டனர்.
இந்த மேம்பாலம் மூலமாக அருணாச்சலப்பிரதேசத்தின் பல மாவட்டங்களில் இருக்கும் தொடர்புகள் புத்துயிர் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்

வெள்ளிச்சுடரே.... இரண்டு வானம் முதல் பாடல்!

குடும்பக் கதையில் நடிக்கும் கவின்!

அயோத்தி இயக்குநர் இயக்கத்தில் விஜய் ஆண்டனி!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


