புது தில்லி: ஜம்மு காஷ்மீரில் மேலும் ஆறு மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சி நீட்டிக்கப்பட்டதற்கு மக்களவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஜம்மு - காஷ்மீர் நடைபெற்ற அரசியல் ஸ்திரமற்ற தன்மையின் காரணமாக ஆளுநர் பரிந்துரைப்படி கடந்த 6 மாதங்களாக ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ளது. அந்த ஆட்சி கடந்த வாரம் புதன் கிழமையுடன் (19.12.18) நிறைவடைய இருந்த நிலையில், வியாழன் முதல் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தலாம் என மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் பரிந்துரை செய்திருந்தார்.
இதுகுறித்து திங்கட்கிழமை (17.12.18) நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. பின்னர் தனது பரிந்துரையை மத்திய அமைச்சரவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு அனுப்பி வைத்தது.
அதன்படி ஜம்மு - காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அறிவித்தார்.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் மேலும் ஆறு மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சி நீட்டிக்கப்பட்டதற்கு மக்களவை ஒப்புதல் அளித்துள்ளது.
பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக மக்களவையில் எதிர்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டிருந்த நிலையில், இது தொடர்பான தீர்மானத்தை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கொண்டு வந்தார். எதிர்க்கட்சிகள் ஜனாதிபதி ஆட்சிஅமல்படுத்தப்பட்டதை அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என்று விமர்சித்த போதும் தீர்மானம் நிறைவேறியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அஜித் குமாரின் கிளாடியேட்டர்ஸ்! அடுத்தடுத்து வெளியான பட அறிவிப்புகள்!

அமைச்சரவையில் இடமில்லை! பதவியை ராஜிநாமா செய்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.!

தில்லியில் மின்சார வாகனப் பதிவுகள் அதிகரிப்பு!

திமுக ஆட்சியின் ஊழலை ஒழித்தது தவெக! ஆதவ் அர்ஜுனா
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



