திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

அமேதியில் ஒட்டப்பட்டிருக்கும் இந்த போஸ்டர்களைப் பார்த்தீர்களா?

காங்கிரஸ் தலைவராக பதவியேற்ற பிறகு தனது நாடாளுமன்ற தொகுதியான அமேதிக்கு முதல் முறையாக ராகுல் காந்தி இன்று வருகை தர உள்ளார்.

News image
Updated On :15 ஜனவரி 2018, 9:24 am


லக்னௌ: காங்கிரஸ் தலைவராக பதவியேற்ற பிறகு தனது நாடாளுமன்ற தொகுதியான அமேதிக்கு முதல் முறையாக ராகுல் காந்தி இன்று வருகை தர உள்ளார்.

அவரது வருகையை முன்னிட்டு, அமேதி முழுவதும் விதவிதமான போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், பத்து தலைகளுடன் ராவணன் வடிவில் மோடியின் புகைப்படமும், அவரை வதம் செய்யும் ராமனாக ராகுல் புகைப்படமும் இடம்பெற்றிருக்கும் ஒரு போஸ்டர் பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது.

அந்த போஸ்டரில், ராகுல் காந்தி, பாஜகவின் அரக்க ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து நாட்டில் ராம ராஜ்யத்தை உருவாக்கப் போவதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனை உள்ளூர் காங்கிரஸ் தலைவர் அபய் ஷுக்லா அச்சடித்து ஒட்டியுள்ளார்.
 

Story image

இது குறித்து மாவட்ட காங்கிரஸ் தலைவர் கூறுகையில், இது கட்சியின் அதிகாரப்பூர்வ போஸ்டர் அல்ல என்றும், அப்படியே இருந்தாலும் அதில் ஆட்சேபனைக்குரிய விஷயம் எதுவும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

தாங்கள் வாக்களித்த தலைவரை வரவேற்க தொண்டர்கள் தங்களுக்கென ஒரு பாணியை பின்பற்றுகிறார்கள் என்றார்.

இன்று மதியம் அமேதி வரும் ராகுல், அங்கு பொதுக் கூட்டத்திலும் கலந்து கொள்கிறார். காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு அமேதிக்கு முதல் முறையாக வரும் ராகுலுக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க கட்சித் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.