கொல்லம்: கேரளாவில் தனது 14 வயது மகனை தாய் ஒருவரே எரித்துக் கொன்ற கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இது தொடர்பாக கொல்லம் காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீனிவாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கேரளாவின் கொல்லம் மாவட்டத்தினைச் சேர்ந்த சிறுவன் ஜித்து (14). இவனைக் கடந்த இரு நாட்களாக காணவில்லையென்று அவனது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தனர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரனை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் ஜித்துவின் வீட்டுக்கு அருகே உள்ள வாழைத் தோட்டம் ஒன்றில் வெள்ளியன்று காலை வெட்டுப்பட்டு எரிந்த நிலையில் அவனது உடல் மீட்கப்பட்டது. பின்னர் தொடர்ந்த போலீசாரின் தீவிர விசாரணையில் ஜித்துவின் தாயர் முன்னுக்குப் பின் முரணாக தகவல்களை கூறிக் கொண்டே இருந்ததால், சந்தேகமடைந்த போலீசார், விசாரணையை தீவிரப்படுத்த, தான் செய்த் குற்றத்தினை ஜித்துவின் தாயார் ஒப்புக் கொண்டார்.
ஜித்துவினை வெட்டிக் கொன்ற அவர், பின்னர் அவனது உடலை எரித்து மீதங்களை வீட்டுக்கு அருகே உள்ள வாழைத் தோட்டம் ஒன்றில் புதைத்துள்ளார். பிறகு மறுநாள் ஒன்றும் தெரியாது போல தனது கணவருடன் காவல் நிலையம் சென்று, ஜித்துவினைக் காணவில்லை என்று போலீசில் புகார் செய்துள்ளார்.
கொலைக்கான காரணம் என்ன என்று தெரியாத நிலையில், தற்பொழுது தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அதிக வாக்குப்பதிவு! மக்களுக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கும் இபிஎஸ் நன்றி!

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு

தமிழகத்தில் மயோனைஸுக்கான தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு!

மீண்டும் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் முதல் பாகம்!
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை


