கச்சா எண்ணெய் விலை உயர்வால் 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியில் இந்திய பங்குச் சந்தை!!ஆசிய விளையாட்டு: தடை தாண்டுதலில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ்!மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் சாமி தரிசனம்!ஆசிய விளையாட்டில் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ரூ. 1.33 கோடி வழங்கிய குஜராத் அரசு!மேடை நாகரிகம் கருதியே ஜெம் வீரமணி குறித்து பேசினேன்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் விளக்கம்மதுரையில் புனரமைக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகத்தை முதல்வர் விஜய் திறந்துவைத்தார்!பி.டி. அரசகுமார் மீதான குண்டர் சட்டம் ரத்து! மதுரையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதல்வர் விஜய் தொடக்கிவைத்தார்!ஒரு ஓட்டில் தோல்வி: திமுக முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் மனு நிராகரிப்பு

வைஃபை வசதியுடன் பறக்க தயாராகுங்கள்: விரைவில் வருது புது சேவை!

விமானத்தில் பயணிக்கும்போதே வைஃபை வசதி பயன்படுத்தும் விதத்தில் புதிய சேவை விரைவில் வரவுள்ளது.

Published On :

இனி வரும் காலங்களில் விமானப் பயணத்தின் போது நடுவானில் வைஃபை வசதியைப் பயன்படுத்தி இணைய சேவையைப் பெறும் வகையிலான புதிய அறிவிப்பை டிராய் நிறுவனம் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

இதன்மூலம் இந்திய எல்லைக்குட்பட்ட வான்வழிப் பயணங்களின் போது இந்த சேவையை பெறும் வகையில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தொலைதொடர்புத்துறை கோரிக்கைகளின் அடிப்படையில் ஆலோசிக்கப்பட்டு தற்போது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதனால், இந்திய எல்லையில் பயணிக்கும் இந்திய மற்றும் அந்நிய விமானங்களில் உள்ள பயணிகள் இந்த சேவையைப் பெற முடியும். இது உலகத் தரத்துக்கு இருக்க வேண்டும் எனவும் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு டிராய் அறிவுறுத்தியுள்ளது.

ஆனால், இதில் சில நிபந்தனைகளும் இடம்பெற்றுள்ளன. அதன்படி, பயணிக்கும் விமானம் தரைமட்டத்தில் இருந்து சுமார் 3,000 அடி உயரத்துக்குள்ளாக பறக்க வேண்டும். அதுபோல பயணிகள் தங்கள் ஸ்மார்ட்ஃபோன்களை ஃப்ளைட் (அ) ஏரோப்ளேன் மோடுக்கு மாற்றினால் மட்டுமே இதை பயன்படுத்த முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.