சுதந்திர தின விழா கொண்டாட்டத்தையொட்டி, தில்லி செங்கோட்டை உள்பட பல்வேறு இடங்களுக்கு வெள்ளிக்கிழமை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் சுதந்திர தின விழா நாளை (சனிக்கிழமை) கோலாகலமாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
தில்லி செங்கோட்டையில் நாளை காலை பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியேற்றி வைத்து, நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.
இதனையொட்டி, தில்லி உள்பட நாடு முழுவதும் முக்கிய நகரங்கள், சுற்றுலாத் தலங்கள் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், தில்லி உயர் நீதிமன்றத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.
அதில், தில்லி உயர் நீதிமன்ற வளாகத்தில் பிற்பகல் 2.11 மணியளவில் வெடிகுண்டு வெடிக்கும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
மேலும், சுதந்திர தின விழா நடைபெறும் செங்கோட்டையும் குறிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுமட்டுமின்றி, ஜாம் நகர் ஹவுஸ், ஜண்டேவாலனில் உள்ள ஃப்ளேடட் கட்டடம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் 3-வது டெர்மினல் ஆகிய பகுதிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
மேலும், அந்த மின்னஞ்சலில் 1984-ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்கள் தொடர்பான வழக்குகள் உட்பட, சீக்கியர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் தில்லி உயர் நீதிமன்றம் நீதி வழங்கத் தவறிவிட்டது என்றும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, மிரட்டல் விடுக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் குழு தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இருப்பினும், இதுவரை சந்தேகத்திற்குரிய பொருள்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Summary
Independence Day - Bomb threats issued for various locations, including the Red Fort
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தில்லி செங்கோட்டை குண்டுவெடிப்புக்கு அல்-கொய்தாவே காரணம்! ஐ.நா. அறிவிப்பு

பழனி முருகன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பாதுகாப்பு அதிகரிப்பு

தில்லியில் பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: காவல்துறையினா் தீவிர சோதனை
மின்னஞ்சல் மூலம் 3 ஆண்டுகளாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மென்பொறியாளா் கைது!
விடியோக்கள்

நடிகர் அப்படிதான் இருப்பார், தலையெழுத்து...: எடப்பாடி பழனிசாமி காட்டம்! | Edappadi Palaniswami




