தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைப் பகுதியில் வரையறுக்கப்பட்ட அளவைக் காட்டிலும் நிலத்தடி நீரில் அதிகமாக உலோக மாசு கலந்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது என்று மத்திய நீர்வளத் துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கூறியுள்ளார்.
மாநிலங்களவையில், இதுதொடர்பான கேள்வி ஒன்றுக்கு அவர் திங்கள்கிழமை எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்:
தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் உள்ளிட்ட தொழிற்சாலைகள் அமைந்துள்ள பகுதியில் நிலத்தடி நீரின் தரத்தை கண்டறிவதற்காக, மத்திய நிலத்தடி நீர் வாரியம் ஆய்வு நடத்தியது. அந்த தொழிற்பேட்டை பகுதியில் இருந்து பல நீர் மாதிரிகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. ஆய்வின் முடிவில், பெரும்பாலான நீர் மாதிரிகளில், வரையறுக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிகமாக உலோக மாசுகள் கலந்திருப்பது தெரியவந்துள்ளது. அந்த நிலத்தடி நீரில், காட்மியம், குரோமியம், மாங்கனீசு, இரும்பு, ஆர்செனிக் போன்ற உலோகங்கள் வரையறுக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிகமாக உள்ளது.
இதேபோல், ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து எடுக்கப்பட்ட நீர் மாதிரியை மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்தது. அந்த ஆய்வின் முடிவுகள், நிலத்தடி நீரில் இரும்பு, ஃபுளோரைடு, காட்மியம், நிக்கல் ஆகிய கனிமங்கள் வரையறுக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிகமாக உள்ளதாகத் தெரிவிக்கின்றன என்றார் அவர்.
தமிழகத்தில் நடைபெற்ற பெருந்திரளான போராட்டத்துக்குப் பிறகு, ஸ்டெர்லைட் ஆலை தற்போது மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

13/32: நாக் அவுட் சுற்றுக்குத் தேர்வாகியுள்ள 13 அணிகள்!

அசாமில் இருந்து துபை, அபுதாபிக்கு நேரடி விமானம்! ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு!

தவெக அரசுக்கு உதவவில்லை! உண்மை என்ன? ஸ்ரீதர் வேம்பு விளக்கம்

தங்கம் விலை அதிகரிப்பால் இரு மடங்கு உயர்வு... பிஃபா உலகக் கோப்பையின் விலை இவ்வளவா?
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



