ராஞ்சி: ஆதார் அட்டை இருந்தாலும் குடும்ப அட்டை வழங்கப்படாத காரணத்தால் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒருவர் பட்டினியால் உயிரிழந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராம்கர் மாவட்டம் மாண்டு தாலுகாவில் உள்ளது புனந்தரியா கிராமம். இந்த கிராமத்தில் வசித்து வந்த சிந்தமன் மல்ஹர் (40) என்பவர்தான் உண்ண உணவில்லாமல் வியாழன் அன்று உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக அவரது மகனான விதேஷ் கூறியதாவது:
நான் புதன்கிழமை இரவு 11.30 மணி அளவில்தான் எங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தற்காலிக வசிப்பிடத்திற்கு திரும்பினேன். எனது தந்தை கடந்த சில நாட்களாக எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை. விரைவில் துவங்கவுள்ள பருவமழைக் காலத்திற்காக இடத்தை தயார் செய்ய வேண்டும் என்று கூறிக் கொண்டிருந்தார்.
அதேபோல் மறுநாள் காலை 10 மணி அளவில் நல்ல வெயிலில் எங்கள் கூடாரத்தின் மேல் சாக்குகளை விரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது, வெயில் சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தான் தெரிவித்ததற்கு சாட்சியாக கூடாரத்திலிருந்த காலி பாத்திரங்களை காண்பித்த அவர், ஆதார் அட்டை இருந்தாலும் தனது தந்தைக்கு குடுமப அட்டை வழங்கப்படாததை சுட்டிக் காட்டினார்.
அதேசமயம் மாவட்டத்தில் பட்டினிச்சாவுகள் எதுவும் இல்லை என்று மாவட்ட நிர்வாகம் மறுத்தாலும், சம்பவ இடத்திற்கு விரைந்த வட்டர அலுவலர் லலன் குமார், விதேஷ் குடும்பத்திற்கு உணவு தானியங்களும் உடனடி நிவாரணமாக ரூ.5000-ம் வழங்கியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வைகையை மாசுபடுத்தாமல் காப்போம்: மதுரை மக்களுக்கு அண்ணாமலை வேண்டுகோள்!

நான் சிம்புவின் அம்மாவா? வதந்திகளுக்கு பதில் கொடுத்த ஆண்ட்ரியா!

சூர்யா - 47 திரைப்படத்தின் பெயர் இதுவா?

இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 3 - நேரலை!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



