இந்திரா காந்தியை ஹிட்லருடன் ஒப்பிட்ட அருண் ஜேட்லி

மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி, எமர்ஜென்சி காலத்தை அமல்படுத்திய 43-ஆவது ஆண்டு நினைவு தினத்தில் இந்திரா காந்தியை ஹிட்லருடன் ஒப்பிட்டுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

இந்திரா காந்தி 43 ஆண்டுகளுக்கு முன் இதே தினத்தில் தான் எமர்ஜென்சியை அமல்படுத்தினார். 21 மாதங்கள் நீடித்த இந்த எமர்ஜென்சி காலத்தின் வடு இன்று வரை ஆராமல் இருக்கிறது. 

மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி எமர்ஜென்சி காலம் குறித்து 3 பாகங்களாக கட்டுரை எழுதி வருகிறார். அதில், இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட 2-ஆம் பாகத்தில் அவர் இந்திரா காந்தியை ஹிட்லருடன் ஒப்பிட்டுள்ளார்.  

அதில் அவர் எழுதியிருப்பதாவது,

"இந்திரா காந்தியும், ஹிட்லரும் அரசியலமைப்பை ரத்து செய்யவில்லை. அவர்கள் குடியரசு அரசியலமைப்பை பயன்படுத்தி ஜனநாயகத்தை சர்வாதிகாரமாக மாற்றிக்கொண்டனர். 

அரசியலமைப்புச் சட்டம் 353-இன் கீழ் இந்திரா காந்தி எமர்ஜென்சியை அமல்படுத்தினார். 359-இன் படி அடிப்படை உரிமைகளை நீக்கினார். இதற்கு எதிர்க்கட்சிகளின் சீர்குலைவை காரணமாக சுட்டிக்காட்டினார். 

ஹிட்லர் ஜனவரி 30,1933 ஜெர்மனியின் தலைவராக பொறுப்பேற்றார். அரசியலமைப்பு பிரிவு 48-ஐ அதிபரின் உதவியுடன் பயன்படுத்தி நாட்டு மக்களின் பாதுகாப்புக்காக எமர்ஜென்சி அதிகாரங்களை அதனுள் கொண்டுவந்தார். 

எமர்ஜென்சியின் அதிகாரங்கள் தனிமனித சுதந்திரம், பேச்சுரிமை போன்றவற்றுக்கு தடை விதித்தது. பிப்ரவரி 27-ஆம் தேதி 1933 எமர்ஜென்சி கொண்டு வருவதற்கான பொய் காரணம் கொண்டுவரப்பட்டது. அப்போது ஜெர்மனியின் நாடாளுமன்றத்துக்கு தீ வைக்கப்பட்டது. 

அரசாங்க கட்டிடங்கள் மற்றும் அருங்காட்சியகங்களுக்கு தீ வைப்பது கம்யூனிஸ்ட்களின் சதித் திட்டம் என்று ஹிட்லர் கூறினார். ஆனால், 13 ஆண்டுகளுக்கு பிறகு அந்த தீ வைப்புக்கு காரணம் நாசிக்கள் மற்றும் நாசி அமைச்சர் கோயபெல் தான் என்பது தெரியவந்தது.  

ஹிட்லர் பெரும்பாலான எதிர்க்கட்சி மக்களவை உறுப்பினர்களை கைது செய்தார். இந்திரா காந்தியும் எதிர்க்கட்சி மக்களை உறுப்பினர்களை கைது செய்தார். இதன்மூலம் 3-இல் 2 பங்கு உறுப்பினர்களின் வருகைப்பதிவை வைத்து, அந்த வாக்குகளை வைத்து, பல அருவருக்கத்தக்க அரசியலமைப்பு திருத்தங்களை அவர் கொண்டுவந்தார். 

42-ஆவது திருத்தம் உயர்நீதிமன்றம் மனு தாக்கல் செய்யும் அதிகாரத்தை அழித்தது. இதனை இந்திய அரசியலமைப்பின் இதயம் மற்றும் ஆத்மா என்று அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளார். அரசியலமைப்பு பிரிவு 368 திருத்தத்தின் மூலம் அரசியலமைப்பு திருத்தத்தை நீதிமன்ற ஆய்வுக்கு அப்பாற்பட்டதாக்கினர். ஹிட்லர் செய்யாத சில காரியங்களை இந்திரா காந்தி செய்தார். 

பெரோஸ் காந்தி சட்டம் என்று பிரபலாக அழைக்கப்படும் சட்டத்தின் படி ஊடகங்களுக்கு நாடாளுமன்ற செயல்பாடுகள் குறித்து வெளியிட வேண்டும். இந்திரா காந்தி நாடாளுமன்ற செயல்பாடுகளை ஊடகங்களில் வெளியிட தடை விதித்தார். 

மக்கள் பிரநிதித்துவச் சட்டம் மற்றும் அரசியலமைப்பு இரண்டிலும் இந்திரா காந்தி திருத்தங்களை கொண்டுவந்தார். 


அரசியலமைப்பு திருத்தம் செய்த பிறகு, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் நீதிமன்றத்தில் நீதிக்கு புறம்பானவர் ஆனார். மக்கள் பிரநிதித்துவச் சட்டத்தில் கொண்டு வந்த திருத்தம் மூலம் தவறான தேர்தல் மூலம் தேர்வான இந்திரா காந்தி சட்டத்தில் சில மாற்றங்கள் கொண்டு வந்து அதனை சரி செய்தார். 

எமர்ஜென்சியில் கொண்டு வந்த திருத்தங்களை ஜனதா கட்சி அரசு திரும்பப் பெற்றது." 

இவ்வாறு அருண் ஜேட்லி தனது 2-ஆவது கட்டுரையில் எழுதியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com