நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தும் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க புதிய செயலி அறிமுகம் 

நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் பாஸ்போர்ட்டுக்கு எளிதாக விண்ணப்பிக்க வழி செய்யும் 'பாஸ்போர்ட் சேவா' எனப்படும் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 9:33 pm IST

புது தில்லி: நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் பாஸ்போர்ட்டுக்கு எளிதாக விண்ணப்பிக்க வழி செய்யும் 'பாஸ்போர்ட் சேவா' எனப்படும் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வெளிநாடு செல்ல விரும்புவர்கள் பொதுவாகவே பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பது என்பது நடைமுறை சிக்கல்கள் சார்ந்ததாக உள்ளது. விண்ணப்பதாரர்கள் இருக்கும் மாநிலத்தில் பாஸ்போர்ட் வழங்கும் அலுவலகங்கள் இல்லாமல் இருந்தால், அண்டை மாநிலங்களுக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டிய நிலை உள்ளது.

அதேபோல ஒரு சில மாவட்ட தலைநகரங்களில் மட்டுமே பாஸ்போர்ட் அலுவலகம் உள்ளதால், மாநிலத்திற்குள்ளேயே சில நூறு கிலோமீட்டர் பயணம் செய்துதான் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் சூழலும் இருந்து வருகிறது.

இந்நிலையில் நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் பாஸ்போர்ட்டுக்கு எளிதாக விண்ணப்பிக்க வழி செய்யும் 'பாஸ்போர்ட் சேவா' எனப்படும் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளதாவது:

நீங்கள் நாட்டின் எந்த பகுதியில் இருந்து வேண்டுமானாலும் நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே அலைபேசி மூலம் விண்ணப்பிக்கும் ’ பாஸ்போர்ட் சேவா’ என்னும் மொபைல் ஆப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நீங்கள் குறிப்பிடும் முகவரியில் போலீஸ் துறையின் வழக்கமான சரிபார்ப்பு பணிகள் முடிந்த பின்னர் தபால் மூலம் பாஸ்போர்ட் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த புதிய முறையின் மூலம் பாஸ்போர்ட் பெறும் நடைமுறைகள் மிக துரிதமாகவும், சுலபமாகவும் முடியும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.