மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு ராகுல் விண்ணப்பிக்கவில்லை: வெளியுறவுத் துறை அமைச்சகம்

கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு செல்ல காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விண்ணப்பிக்கவில்லை என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Updated On :29 ஜூன் 2018, 2:40 am IST

கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு செல்ல காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விண்ணப்பிக்கவில்லை என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறியதாவது:
திபெத்தில் அமைந்துள்ள கைலாஷ் மானசரோவருக்கு புனித யாத்திரை மேற்கொள்ள ராகுல் காந்தி விண்ணப்பிக்கவில்லை. வெளியுறவு அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள வழியாகவோ அல்லது தனிப்பட்ட வழியிலோ அவர் கைலாஷ் மானசரோவர் செல்லலாம். ஆனால், அவர் இதுவரை அதற்கு விண்ணப்பிக்கவில்லை என்றார் ரவீஷ் குமார்.
கைலாஷ் மானசரோவர் யாத்திரை மேற்கொள்ள மத்திய அரசிடம் இருந்து ராகுல் காந்திக்கு அனுமதி கிடைக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சி கடந்த வாரம் தெரிவித்திருந்தது. முன்னதாக, தில்லியில் கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியபோது, மே 12-ஆம் தேதி கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல் முடிந்த பிறகு கைலாஷ் மானசரோவர் யாத்திரை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்திருந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.