மோஜ்தபா கமேனி கவலைக்கிடமா? விடியோ வெளியிட்ட ஈரான்!குடும்ப அட்டைதாரர்கள் விரல்ரேகை பதிவு செய்ய இன்றே கடைசி!தொகுதி மறுவரையறையை நிராகரிக்க காரணம் என்ன? மாணிக்கம் தாகூர் விளக்கம்மகாராஷ்டிரத்தில் நில அதிர்வு: வீடுகளில் விரிசல்; மக்கள் அச்சம்செப். 1 முதல் கோயில்களில் செல்போன்கள் கொண்டுச் செல்லத் தடை! - அமைச்சர் ரமேஷ்
/

தாஜ் மஹாலை பாதுகாப்பதில் தொல்லியல்துறை தோல்வி: உச்ச நீதிமன்றம்

தாஜ் மஹாலை பாதுகாக்க, இந்திய தொல்லியல் ஆய்வு (ஏஎஸ்ஐ) துறை போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பதை உச்ச நீதிமன்றம் மிக கடுமையாக கண்டித்துள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 6:30 pm IST

தாஜ் மஹாலை பாதுகாக்க, இந்திய தொல்லியல் ஆய்வு (ஏஎஸ்ஐ) துறை போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பதை உச்ச நீதிமன்றம் மிக கடுமையாக கண்டித்துள்ளது.
கடமையை செய்திராத தொல்லியல் துறை, தாஜ் மஹால் பராமரிப்பு நடவடிக்கையில் தேவைதானா? என்றும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதுதொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.பி.லோகூர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தாஜ் மஹால் வளாகத்தில் பூச்சித் தொல்லை இருப்பது குறித்து நீதிபதிகள் கவலை தெரிவித்தனர். இதுதொடர்பாக மத்திய அரசு அதிகாரிகள் சார்பிலும், தொல்லியல் துறை சார்பிலும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு தொல்லியல் துறை சார்பில் ஆஜரான வழக்குரைஞர் பதில் அளிக்கையில், தாஜ் மஹாலை ஒட்டிய யமுனை நதியில் தண்ணீர் தேங்கிய நிலையில் இருப்பதே பூச்சித் தொல்லைக்கு காரணம் என்று தெரிவித்தார். இதேபோல் மத்திய அரசின் கூடுதல் சொலிஸிட்டர் ஜெனரல் ஏ.என்.எஸ்.நட்கர்னி பதில் அளிக்கையில், தாஜ் மஹாலை பாதுகாப்பதற்காக வெளிநாட்டு நிபுணர்களை பணியமர்த்திக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் தெரிவித்த யோசனையை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் பரிசீலித்து வருகிறது என்றார்.
பின்னர் நீதிபதிகள் கூறியதாவது:
தொல்லியல் துறை தமது கடமையை சரிவர செய்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. தொல்லியல் துறை தம்மை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் செயல்படுவதைக் கண்டு நாங்கள் ஆச்சரியமடைகிறோம். தொல்லியல் துறை தாஜ் மஹால் பராமரிப்பில் வேண்டுமா? வேண்டாமா? என்பது குறித்து மத்திய அரசுதான் பரிசீலிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். தாஜ் மஹால், உலக பாரம்பரிய சின்னங்களுக்கான யுனெஸ்கோ பட்டியலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.