கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

ம.பி. தேர்தல்: பாஜக 2-ஆவது வேட்பாளர் பட்டியல் வெளியீடு: சிவராஜ் சிங் சௌஹான் வேட்பு மனு தாக்கல்

மத்தியப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில், பாஜக சார்பில் போட்டியிடும் 17 வேட்பாளர்கள் அடங்கிய 2-ஆவது பட்டியலை அக்கட்சி திங்கள்கிழமை வெளியிட்டது. இதில், மறைந்த

News image

புத்னி தொகுதியில் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்த முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான்.

Updated On :6 நவம்பர் 2018, 1:08 am IST


மத்தியப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில், பாஜக சார்பில் போட்டியிடும் 17 வேட்பாளர்கள் அடங்கிய 2-ஆவது பட்டியலை அக்கட்சி திங்கள்கிழமை வெளியிட்டது. இதில், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உறவினரும், மக்களவை எம்.பி.யுமான அனூப் மிஸ்ராவின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
230 உறுப்பினர்களைக் கொண்ட மத்தியப் பிரதேச சட்டப் பேரவைக்கு, வரும் 28-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அந்த மாநிலத்தில் கடந்த 2003-இல் இருந்து பாஜக ஆட்சியில் இருந்து வருகிறது. இம்முறையும் ஆட்சியை தக்க வைக்கும் நோக்கில் பாஜக தேர்தல் பணியாற்றி வருகிறது.
ஏற்கெனவே 177 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அடங்கிய முதல்கட்ட பட்டியலை பாஜக கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டது. 
இதையடுத்து, 17 வேட்பாளர்கள் அடங்கிய 2-ஆவது பட்டியலை, தில்லியில் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா திங்கள்கிழமை வெளியிட்டார். இதில், மொரீனா மக்களவைத் தொகுதி பாஜக எம்.பி.யும், வாஜ்பாயின் உறவினருமான அனூப் மிஸ்ரா, பிதர்வால் பேரவை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 2013 பேரவைத் தேர்தலில் இவர் இதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இதேபோல், முன்னாள் எம்.பி.யும், பழங்குடியின சமூக தலைவருமான திலீப் சிங் புரியாவின் மகள் நிர்மலா புரியாவுக்கு, பெட்லாவாட் தொகுதியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
சிவராஜ் சிங் சௌஹான் வேட்பு மனு: இதனிடையே, மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான், சிஹோர் மாவட்டத்திலுள்ள புத்னி தொகுதியில் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார். சிஹோர் மாவட்டத்தில்தான், சௌஹானின் சொந்த கிராமம் உள்ளது.
புத்னி தொகுதியிலிருந்து கடந்த 1990-இல் முதல்முறையாக எம்எல்ஏ-ஆக தேர்வான சௌஹான், கடந்த 2006-இல் அங்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார். பின்னர், 2008, 2013 பேரவைத் தேர்தல்களிலும் இத்தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
தற்போது மீண்டும் புத்னியில் களமிறங்கும் சௌஹான், தனது மனைவி சத்னா சிங், மகன்கள் குணால், கார்த்திகேய் மற்றும் ஆதரவாளர்களுடன் சென்று திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநிலத்தில் கடந்த 2003-இல் காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்தபோது, சாலைகளில் இருந்த பள்ளங்களின் எண்ணிக்கை எவ்வளவு? அதன் பிறகு பாஜக ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட சாலைகளின் எண்ணிக்கை எவ்வளவு? என்பதை மக்கள் அறிவர். மாநிலத்தை இருண்ட காலத்துக்கு அழைத்துச் சென்ற காங்கிரஸுக்கு மக்கள் ஆதரவளிக்கமாட்டார்கள் என்றார்.
இதேபோல், மத்தியப் பிரதேச சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் அஜய் சிங், சுர்ஹாட் தொகுதியிலும், மாநில அமைச்சர்கள் நரோத்தம் மிஸ்ரா, ஜெயந்த் மலையா ஆகியோர் முறையே தாடியா, தாமோ தொகுதிகளிலும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.