/

ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில்  பாய்ந்தது 

ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி நிலையத்தில் இருந்து  ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் திட்டமிட்டபடி வெற்றிகரமாக விண்ணில்  ஏவப்பட்டது.  

News image
Updated On :14 நவம்பர் 2018, 11:53 am

DIN

ஸ்ரீஹரிகோட்டா: ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி நிலையத்தில் இருந்து  ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் திட்டமிட்டபடி வெற்றிகரமாக விண்ணில்  ஏவப்பட்டது.  

முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஜிஎஸ்எல்வி மாக்-3 ராக்கெட் 3,423 கிலோ எடை கொண்ட தாகும். இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப செயல்பட்டை மேம்படுத்த உதவும் ஜிசாட் 29  செயற்கைக்கோளினை மாக் 3 ராக்கெட் எடுத்துச் சென்றுள்ளது. 

இதன் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் ஆகும்.  இதனை ஏவுவதற்கான கவுண்ட் டவுன் செவ்வாயன்று துவங்கியது. 

இந்நிலையில் ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி நிலையத்தில் இருந்து  ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் திட்டமிட்டபடி புதன் மாலை வெற்றிகரமாக விண்ணில்  ஏவப்பட்டது.  

விஞ்ஞானிகள் அளித்துள்ள தகவலின்படி ஏவப்பட்ட 17 நிமிடங்களில் ராக்கெட்டானது, உரிய சுற்று வட்டப் பாதையில் செயற்கைகோளினை நிலை நிறுத்தும் என்று தெரிகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.