நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

உ.பி.: யோகி ஆதித்யநாத் அரசு மீது மாநில அமைச்சர் புதிய குற்றச்சாட்டு

உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையான பாஜக அரசு மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு பள்ளி திறக்க நிதி ஒதுக்கவில்லை என்று கூட்டணிக் கட்சியான சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி (எஸ்பிஎஸ்பி) தலைவரும், மாநில

Published On :30 ஜனவரி 2024, 11:10 pm IST

உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையான பாஜக அரசு மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு பள்ளி திறக்க நிதி ஒதுக்கவில்லை என்று கூட்டணிக் கட்சியான சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி (எஸ்பிஎஸ்பி) தலைவரும், மாநில பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அமைச்சருமான ஓம் பிரகாஷ் ராஜ்பர் குற்றம்சாட்டியுள்ளார்.
முன்னதாக, ராஜ்பர் தீய சக்தி என்று உத்தரப் பிரதேச மாநில பாஜக தலைவர் மகேந்திர நாத் அண்மையில் விமர்சித்தார். இதையடுத்து, மாநில பாஜகவுக்கும், ராஜ்பருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சுட்டுரையில் (டுவிட்டர்) ராஜ்பர் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில், "உத்தரப் பிரதேசத்தில் 75 மாவட்டங்கள் உள்ளன. இதில் 1.5 கோடி மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியர் உள்ளனர். இவர்களுக்கென்று 16 சிறப்புப் பள்ளிகள் மட்டுமே உள்ளன. இதில், அனைத்து மாணவர்களுக்கும் எவ்வாறு கல்வி அளிக்க முடியும். கூடுதல் பள்ளிகள் அமைக்க நிதி கோரினால், மாநில அரசு ஒதுக்கீடு செய்ய மறுக்கிறது' என்று பதிவிட்டுள்ளார்.
மாநில அமைச்சர் ஒருவர், அரசுக்கு எதிராக இவ்வாறு குற்றம்சாட்டியுள்ளது உத்தரப் பிரதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  முன்னதாக தங்கள் கட்சிக்கு பாஜக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று ராஜ்பர் குற்றம்சாட்டியிருந்தார். அப்போது, "பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவுடன் முன்பு நடத்திய பேச்சுவார்த்தையில், உத்தரப் பிரதேசத்தில் அமைச்சர் பதவிக்கு இணையான மாநகராட்சி  தலைவர் பதவியும், 2 துணை தலைவர்  பதவிகளும் எங்கள் கட்சிக்கு அளிக்கப்படும் என வாக்குறுதியளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எதுவும் நடைபெறவில்லை. முதல்வர் யோகி ஆதித்யநாத், எங்கள் கட்சிக்கு எதிராக பேசி வருகிறார்' என்று குற்றம்சாட்டி இருந்தார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் ராஜ்பரின் கட்சி பாஜக கூட்டணி சார்பில் 8 தொகுதிகளில் போட்டியிட்டு நான்கு இடங்களில் வெற்றி பெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.