திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

ஒடிஸாவின் 21 இரவு சுற்றுலாப் பகுதிகளை மேம்படுத்த விடுதி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை

ஒடிஸாவில் உள்ள 21 இரவு சுற்றுலாப் பகுதிகளையும் மேம்படுத்த வேண்டும் என உணவு மற்றும் விடுதி உரிமையாளர்கள் சங்கம் ஒடிஸா அரசுக்கு திங்கள்கிழமை கோரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :26 நவம்பர் 2018, 12:19 pm

ஒடிஸாவில் உள்ள 21 இரவு சுற்றுலாப் பகுதிகளையும் மேம்படுத்த வேண்டும் என உணவு மற்றும் விடுதி உரிமையாளர்கள் சங்கம் ஒடிஸா அரசுக்கு திங்கள்கிழமை கோரிக்கை விடுத்துள்ளது.

ஒடிஸா மாநிலம் முழுவதும் எண்ணற்ற சுற்றுலாப் பகுதிகள் உள்ளன. குறிப்பாக 21 இரவு சுற்றுலாப் பகுதிகள் உள்ளன. மேலும் 9 சுற்றுலாப் பகுதிகளை ஏற்படுத்தும் இடங்களும் உள்ளன. எனவே பூரி மற்றும் கோனார்க் பகுதிகள் மட்டுமல்லாமல் மாநிலம் முழுவதும் உள்ள சுற்றுலாவை மேம்படுத்தி பிரபலப்படுத்த வேண்டும் என உணவு மற்றும் விடுதி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஒடிஸா அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும் ஒடிஸாவில் சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக தங்கள் தரப்பில் இருந்து விலைச் சலுகைகளை அறிவித்து அதிகளவிலான சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக நடவடிக்கை எடுக்கப்படும். அதுபோன்று சுற்றுலாப் பகுதிகள் அமைந்துள்ள மிகவும் பின்தங்கிய கிராமப் பகுதிகளில் அங்குள்ள மக்களுடன் இணைந்து வேலைவாய்ப்புகளை உருவாக்கி அவர்களுக்கு போதிய பொருளாதார நிலையை ஏற்படுத்தவும் தயாராக இருப்பதாக அச்சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு சிறந்த சுற்றுலா அமைப்பை உருவாக்க வேண்டும் எனவும் அரசுக்கு அவர்கள் கோரிக்கை வைத்தனர். இதனை சர்வதேச தரத்தில் அமையும் விதமாக வடிவமைக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.