திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

சபரிமலை எஸ்.பி. அலுவலகம் நோக்கி பாஜக பேரணி அறிவிப்பு

சபரிமலையில் போலீஸார் ஏற்படுத்தியுள்ள கெடுபிடிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக தேசியச் செயலாளர் கே.சுரேந்திரன் பேரணி அறிவித்துள்ளார்.

News image
Updated On :26 நவம்பர் 2018, 12:16 pm

சபரிமலையில் போலீஸார் ஏற்படுத்தியுள்ள கெடுபிடிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக தேசியச் செயலாளர் கே.சுரேந்திரன் பேரணி அறிவித்துள்ளார்.

சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களையும் தரிசனத்துக்கு அனுமதிக்கும் விவகாரம் தொடர்பாக பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு ஐயப்ப பக்தர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து கேரள போலீஸார் தடியடி நடத்தி ஐயப்ப பக்தர்களை விலக்கி வருகின்றனர்.

இந்நிலையில், சபரிமலை, நிலக்கல், பம்பா உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார் ஏற்படுத்தியுள்ள கெடுபிடிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்.பி. அலுவலகம் நோக்கி பேரணி நடத்தவுள்ளதாக அம்மாநில பாஜக தேசியச் செயலாளர் கே.சுரேந்திரன் அறிவித்துள்ளார். 

இதுதொடர்பாக நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை பயன்படுத்தி கேரள அரசு தவறாகப் பயன்படுத்தி வருவதாக சபரிமலை மாவட்ட பாஜக தலைவர் என்.ஹரி குற்றம்சாட்டினார். மேலும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் ஐயப்ப பக்தர்களையும் அவர்கள் மறித்து வருவதாக கடுமையாகச் சாடினார்.

அதுமட்டுமல்லாமல் நிலக்கல் பகுதியில் இருந்து தரிசனம் செய்ய 6 மணி நேரம் மட்டுமே போலீஸார் அனுமதி வழங்கியுள்ளதற்கும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக பல கம்யூனிஸ்டு அமைச்சர்கள் மீது கிரிமினல் மற்றும் கொலை வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அவர்களை விடுத்து கே.சுரேந்திரன் வேண்டுமென்றே கைது செய்யப்பட்டதாகவும் என்.ஹரி தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.