திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

அனைவருக்கும் சமமான பொருளாதார வளர்ச்சி தேவை: பிரணாப் முகர்ஜி

அனைவருக்கும் சமமான பொருளாதார வளர்ச்சி தேவை என முன்னாள் குடியரசுத் தலைவர் பிராணப் முகர்ஜி தெரிவித்தார்.

News image
Updated On :29 நவம்பர் 2018, 1:14 pm

அனைவருக்கும் சமமான பொருளாதார வளர்ச்சி தேவை என முன்னாள் குடியரசுத் தலைவர் பிராணப் முகர்ஜி தெரிவித்தார்.

பெங்களூரில் உள்ள க்ரீன்உட் சர்வதேச பள்ளியின் வர்தூர் வளாகத்தில் சுமார் 5,500 மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது. இதில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கலந்துகொண்டார். அப்போது அவர் மாணவர்களிடையே பேசியதாவது:

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் சமமான பொருளாதார வளர்ச்சி ஏற்பட வேண்டும். குறிப்பாக சமுகப் பொருளாதாரத்தில் பின்னணியில் இருப்பவர்களுக்கு இந்த சமதளம் சென்றடைய வேண்டும். கல்வியால் மட்டுமே ஒரு சமூதாயத்தை சிறந்த பொருளாதார வளர்ச்சிக்கு கொண்டு செல்ல முடியும். அப்போதுதான் சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்ய முடியும். 

நமது தேசத்தில் உள்ள நாம் அனைவரும் சமமானவர்கள் தான். ஒருவரிடையே மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்றால் அக்கல்வி அர்த்தமற்றது என மகாத்மா காந்தி குறிப்பிட்டுள்ளார். எனவே நம் வாழ்வின் எக்காலத்திலும் கற்றல் என்பது இருக்க வேண்டும், கற்பதில் எந்த தடையும் இருக்கக் கூடாது என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.