கோழிக்கோடு: என்ன கழிவறையா? அதெல்லாம் கிடையாது. தண்ணீரைக் குறைவாகக் குடியுங்கள். அல்லது டியூப் பயன்படுத்துங்கள்..
டெய்லராக இருந்து சமூக ஆர்வலராக மாறிய விஜி, தான் பணியாற்றும் நிறுவனத்தின் உரிமையாளரிடம் கழிவறைப் பற்றி முதலில் கேட்டபோது கிடைத்த பதில்தான் அது.
2009 - 2010 சமயங்களில் கேரளாவில் எஸ்எம் சாலையில் உள்ள நிறுவனங்கள் அனைத்திலும் இதுதான் நிலை. ஏராளமான போராட்டங்கள், வேலை நிறுத்தம் என 8 ஆண்டுகள் நீடித்த போராட்டத்தின் இறுதியாக அவரது கோரிக்கை 2018ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் விஜி சர்வதேச அளவில் அறியப்பட்ட பெண்களில் ஒருவரானார்.
இதன் காரணமாகத்தாக பிபிசி தனது அதிகாரமிக்க 100 பெண்மணிகளின் பட்டியலில் விஜியை இணைத்தது. விஜிக்கு 73வது இடம் கிடைத்தது.
பொறுப்பில்லாத தந்தை, கடுமையாக உழைத்துக் குடும்பத்தைக் காப்பாற்றும் தாய் அடைந்த துயரங்கள் அனைத்துமே விஜியை பிற்காலத்தில் சமூகப் போராளியாக மாற்றியது.
கழிவறை இல்லாததால் எஸ்எம் சாலையில் பணியாற்றும் ஏராளமான பெண்கள் சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்டு துயரப்படுவதைப் பார்த்த விஜி கழிவறைக் கட்டுமாறு வலியுறுத்தி போராட்டத்தைத் தொடங்கினார். 8 ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கே வெற்றி.

உங்களது போராட்டங்கள் முடிந்துவிட்டனவா? அடுத்து என்ன? என்றக் கேள்விக்கு அவரிடம் இருந்து சட்டென்று வரும் பதில்.. "இல்லை. ஆண்களுக்கு இணையாக பெண்களையும் பார்க்க வேண்டும். சமமான ஊதியம், சமமான பணிநேரமே அடுத்த இலக்கு" என்கிறார் அவர் உறுதியாக.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதலீடு செய்யப் போகிறீர்களா? இந்த 10 விஷயங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!

தேனியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 2 பேர் பலி

நீரைக் கண்ட குழந்தைபோல்.. குதூகலமாக ஆட்டம் போட்ட கோயில் யானை பிரக்ருதி!

ஸ்வயம் பிளஸ் தளம்: புதிய ‘ஏஐ’ பாடப்பிரிவுகள்! சென்னை ஐஐடி-யில் அறிமுகம்
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

