உலகின் வலிமையான அமைப்பு இந்திய நீதித்துறை: தீபக் மிஸ்ரா

உலகின் வலிமையான அமைப்பு இந்திய நீதித்துறை: தீபக் மிஸ்ரா

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, திங்கள்கிழமை பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து மாலை பிரிவு உபசார விழா நடைபெற்றது. 

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, திங்கள்கிழமை பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து திபக் மிஸ்ராவுக்கு திங்கள்கிழமை மாலை பிரிவு உபசார விழா நடைபெற்றது. இதில் அவர் பேசுகையில்,

எங்களுக்கு எல்லா வழக்குகளும் ஒன்றுதான். கண்ணீர் என்றால் கண்ணீர்தான். அதில் பணக்காரன், ஏழை என நாங்கள் பார்ப்பதில்லை. உலகிலேயே மிகவும் வலுவான, வலிமையான அமைப்பு இந்திய நீதித்துறைதான்.

ஒருவரின் பூர்வாங்கத்தின் அடிப்படையில் யாரையும் மதிப்பிடமாட்டேன். மாறாக ஒருவரின் நடவடிக்கைகள் மற்றும் கண்ணோட்டங்களின் அடிப்படையில் மட்டுமே மதிப்பிடுவேன். ஒருவரின் தனித்துவத்தின் அடிப்படையில் உச்ச நீதிமன்ற அமைப்பு அமைந்தால் அது மிகவும் வலிமையானதாக இருக்கும். இதனால் நீதிபதிகள் யதார்த்தத்தை அறியாதவர்கள் என்று கூறவில்லை. ஆனால், அது அனைவரையும் இணைக்கும் பாலமாக இருக்க வேண்டும். 

என்னைப் போன்று எதையும் ஏற்றுக்கொண்டு, ஆராயும் ஞானம் கொண்ட இளைஞர்களை வரவேற்கிறேன். இன்றைய இளம் வழக்கிறஞர்கள் நீதித்துறையின் மிகப்பெரிய சொத்துக்கள். புதுப்புது சட்டங்களை உருவாக்கும் வல்லமை அவர்களிடம் உள்ளது என்றார்.

முன்னதாக, 1996-ம் ஆண்டு ஜனவரி 17ம் தேதி ஒடிஸா உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக தீபக் மிஸ்ரா நியமிக்கப்பட்டார். 1997ம் ஆண்டு டிசம்பரில் நிரந்தர நீதிபதியானார். பின்னர் 2009-ம் ஆண்டு பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார். 2010-ல் தில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியானார்.

இதையடுத்து 2011-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாகி, 2017 ஆகஸ்ட் 28-ல் தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார் தீபக் மிஸ்ரா.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோய் அக்டோபர் 3-ம் தேதி பதவியேற்கவுள்ளார். இதனிடையே தீபக் மிஸ்ரா பிரிவு உபசார விழாவில் நஞ்சன் கோகாய் பேசுகையில், தீபக் மிஸ்ரா வழங்கிய தீர்ப்புகள் எதிர்காலத்திலும் பல நல்ல மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com