சில பணக்காரர்களுக்காக வேலை செய்யும் பாஜக; ஏழைகளை நினைக்கும் காங்கிரஸ்: ராகுல்
இந்தியாவில் வாழும் சில பணக்காரர்களுக்காக பாஜக பணியாற்றுவதாகவும், ஏழைகளையும், விவசாயிகளின் நலனையும் புறக்கணிப்பதாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.


இந்தியாவில் வாழும் சில பணக்காரர்களுக்காக பாஜக பணியாற்றுவதாகவும், ஏழைகளையும், விவசாயிகளின் நலனையும் புறக்கணிப்பதாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
ஆதிவாசி ஏக்தா பரிஷத் என்ற பழங்குடியினருக்கான அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் ராகுல் காந்தி சனிக்கிழமை கலந்துகொண்டு பேசினார்.
மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பழங்குடியின மக்களின் உரிமைக்கான மசோதாவைக் கொண்டு வருவோம் என்றும் ராகுல் உறுதி அளித்தார்.
பணக்காரர்களுக்குத்தான் உதவி செய்ய வேண்டும் என்று விரும்பினால் செய்யுங்கள். ஆனால், அதே சமயம் ஏழை விவசாயிகளுக்கும், ஏழை மக்களுக்கும் உதவுங்கள் என்றும் மத்திய அரசு குறித்து ராகுல் கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், பழங்குடியின மக்களுக்கான உரிமை மசோதா என்பது அவர்களுக்கு அளிக்கப்படும் பரிசு அல்ல, அது அவர்களது உரிமை. பழங்குடியின மக்கள் வாழும் பகுதியில் உள்ள நிலம், தண்ணீர், வனப்பகுதியின் மீது உரிமை கொண்டவர்களாக இருப்பது அவசியம் என்றும் ராகுல் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...