இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

ராம் கோபால் வர்மா மீதான பிடி வாரண்ட் ரத்து

பதிப்புரிமை மீறல் வழக்கில் இயக்குநர் ராம் கோபால் வர்மாவுக்கு எதிராக பிறப்பித்திருந்த பிடி வாரண்ட்டை மகாராஷ்டிர நீதிமன்றம் வியாழக்கிழமை ரத்து செய்தது.

Published On :30 ஜனவரி 2024, 10:12 pm IST


பதிப்புரிமை மீறல் வழக்கில் இயக்குநர் ராம் கோபால் வர்மாவுக்கு எதிராக பிறப்பித்திருந்த பிடி வாரண்ட்டை மகாராஷ்டிர நீதிமன்றம் வியாழக்கிழமை ரத்து செய்தது.
அக்யாத்' என்னும் ஹிந்தி படம் கடந்த 2009-ம் ஆண்டு வெளிவந்தது. இந்த படத்தை இயக்குநர் ராம் கோபால் வர்மா இயக்கியிருந்தார். ரோனி சுருவாலா என்பவர் இந்த படத்தை தயாரித்திருந்தார்.
இந்த படம் வெளிவந்த பிறகு, சித்திக் முஸ்தாக் முஷின் என்பவர் ராம் கோபால் வர்மா மற்றும் ரோனிக்கு எதிராக ஒளரங்காபாத் நீதிமன்றத்தில் பதிப்புரிமை மீறல் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்திருந்த மனுவில், அக்யாத் படத்தின் கதையை ராம் கோபால் வர்மாவுக்கு 1998-ஆம் ஆண்டு தாம் அனுப்பி வைத்ததாகவும், அந்த கதையை கதை எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்திருப்பதாகவும், படத்தின் கரு, தான் எழுதிய கதையை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கில் வர்மா மற்றும் ரோனிக்கு ஜாமீனில் வெளிவர முடியாதவாறு பிடி வாரண்ட் பிறப்பித்து கடந்த ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த பிடி வாரண்ட்டை ரத்து செய்யக் கோரி ஒளரங்காபாத் நீதிமன்றத்தில் வர்மா மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி கைலாஷ் குராந்த்ரே முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, வர்மாவுக்கு எதிரான பிடி வாரண்ட்டை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும் வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை செப்டம்பர் 20-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
2009-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளிவந்த அக்யாத் பாலிவுட் படத்தில் நிதின், கெளதம் ரோடி, பிரியங்கா கோத்தாரி ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் தெலுங்கு மொழியிலும் வெளியிடப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.