பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

லேசர் தொழில்நுட்பத்திலான வேலி: 17-இல் தொடங்கி வைக்கிறார் ராஜ்நாத்

நாட்டிலேயே முதல் முறையாக ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் லேசர் தொழில் நுட்பத்துடன் கூடிய வேலியை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரும் 17-ஆம் தேதி

Published On :


நாட்டிலேயே முதல் முறையாக ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் லேசர் தொழில் நுட்பத்துடன் கூடிய வேலியை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரும் 17-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கிறார்.
இதுதொடர்பாக அரசு அதிகாரிகள் வியாழக்கிழமை கூறியதாவது:
முன்னோட்ட அடிப்படையில் செயல்படுத்தப்படும் இந்த லேசர் வேலி' குறித்த செயல் விளக்கத்தை, ராஜ்நாத் சிங் முன்பாக எல்லை பாதுகாப்புப் படை மற்றும் துணை ராணுவப் படையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் செய்து காட்ட உள்ளனர்.
இந்த லேசர் வேலி அமைப்போடு கண்காணிப்பு கேமரா இணைப்புகளும் இருக்கும். எல்லையை ஒட்டிய நிலைகளில் இருக்கும் பாதுகாப்புப் படையினர் அதன் மூலமாக கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு தேவையேற்படும் பட்சத்தில் உடனடி பதில் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
இந்த லேசர் வேலியானது, வரும் காலத்தில் பாகிஸ்தான், வங்கதேசத்துடன் இந்தியா பகிர்ந்துகொண்டுள்ள எல்லைப் பகுதியில் 2,400 கி.மீ. தொலைவுக்கு நிறுவப்படும். ஊடுருவல் மற்றும் சட்டவிரோத குடியேற்றங்களை தடுக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முன்னெடுத்துள்ள விரிவான ஒருங்கிணைந்த எல்லை மேலாண்மை அமைப்பு' என்ற நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்று அந்த அதிகாரிகள் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.