பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும், மத்தியில் முன்பு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் பொறுப்பேற்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டியது காங்கிரஸ் கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைக்க காங்கிரஸ் முயற்சி செய்துவரும் நிலையில், மாயாவதியின் கருத்து காங்கிரஸ் கட்சியினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்த நாடு தழுவிய போராட்டத்துக்கும் பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு தெரிவிக்கவில்லை. அத்துடன், மத்தியில் முன்பு ஆட்சி புரிந்த காங்கிரஸும், தற்போதைய பாஜக அரசும் இணைந்தே பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சிப் பிரமுகர் ஒருவர் கூறுகையில், பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரே அணியாக கூட்டு சேர்ந்து வரும் நிலையில், மாயாவதி இவ்வாறு கூறியிருப்பது கவலையளிக்கிறது. ஏற்கெனவே, நமது கூட்டணியின் வலிமை குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டு வருகிறது. அவரின் கருத்து கட்சியினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தவில்லை' என்றார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் அதிக இடங்களை பேரம் பேசி பெறுவதற்காக இவ்வாறான உத்திகளை மாயாவதி கையாள்கிறார். இந்த மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு அதிக ஆதரவு இருக்கிறது' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






