புது தில்லி: மசூதிகளில் பெண்களும் தொழுகை நடத்தலாம் என தீர்ப்பு வழங்குமா உச்ச நீதிமன்றம் என்று முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.
கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. நீண்ட காலமாக இருந்து வரும் இந்த நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகளின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஆர்.எப்.நாரிமன், டி.ஒய்.சந்திரசூட், ஏ.எம்.கன்வில்கர் மற்றும் பெண் நீதிபதி இந்து மல்கோத்ரா ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள் அரசியல் சாசன அமர்வு விசாரித்து வெள்ளிக்கிழமையன்று பரபரப்பான தீர்ப்பு வழங்கியது.
பெரும்பான்மையான நீதிபதிகளின் கருத்துப்படி அனைத்து வயது பெண்களும் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று வழிபட உரிமையுண்டு என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில் மசூதிகளில் பெண்களும் தொழுகை நடத்தலாம் என தீர்ப்பு வழங்குமா உச்ச நீதிமன்றம் என்று முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:
சபரிமலை கோயிலின் நூற்றாண்டு பழமையான நடைமுறையில் குறுக்கிட்டுள்ளதன் மூலம் பிரச்சினைகள் நிறைந்த பெட்டியை உச்சநீதிமன்ற நீதிபதிகள் திறந்திருக்கிறார்கள்.
இந்தியாவில் உள்ள கோயில்கள், மசூதிகள் உள்ளிட்டவை அந்தந்த மத நம்பிக்கையுடனும், தனிப்பட்ட வழிபாட்டு முறைகளுடன் இருக்கிறது.
இந்தியாவில் உள்ள பெரும்பாலான மசூதிகளில் பெண்கள் வழிபட அனுமதிக்கப்படுவதில்லை. இந்துக்களின் வழிபாட்டு முறைகளில் தலையிடும் உச்சநீதிமன்றம் அதே தைரியத்துடன், மசூதிகளில் பெண்களும் தொழுகை நடத்தலாம் என்று தீர்ப்பு வழங்குமா?
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதுச்சேரி அடுத்த 5 ஆண்டுகளில் அடுத்தக் கட்டத்துக்குச் செல்லும்: கே. அண்ணாமலை பேச்சு

நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!

6-வது பாடமாக தொழில்கல்வி கட்டாயம்: புதுச்சேரி கல்வித் துறை உத்தரவு

புதுச்சேரியில் நாளை முதல்வா் மு.க.ஸ்டாலின் பிரசாரம்
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


