கவுதம் கம்பீரிடம் இரண்டு வாக்காளர் அடையாள அட்டைகள்?: வழக்குத் தொடர்ந்தார் ஆம் ஆத்மி வேட்பாளர் 

தில்லி கிழக்கு தொகுதி பாஜக வேட்பாளரான கவுதம் கம்பீரிடம் இரண்டு வாக்காளர் அடையாள அட்டைகள் இருப்பதாகக் கூறி, அத்தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
கவுதம் கம்பீரிடம் இரண்டு வாக்காளர் அடையாள அட்டைகள்?: வழக்குத் தொடர்ந்தார் ஆம் ஆத்மி வேட்பாளர் 

புது தில்லி: தில்லி கிழக்கு தொகுதி பாஜக வேட்பாளரான கவுதம் கம்பீரிடம் இரண்டு வாக்காளர் அடையாள அட்டைகள் இருப்பதாகக் கூறி, அத்தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான கவுதம் கம்பீர் சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். அதையடுத்து அவர் தில்லி கிழக்கு தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.அவர் வேட்பு மனு தாக்கல் செய்த போதும் பிரமாணப் பத்திரம் தொடர்பாக சர்ச்சை எழுந்தது.

இந்நிலையில் கவுதம் கம்பீரிடம் இரண்டு வாக்காளர் அடையாள அட்டைகள் இருப்பதாகக் கூறி, அத்தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அவரை எதிர்த்துப் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் அதிஷி சார்பில் தில்லி திஸ்ஹசாரி பாக் நீதிமன்றத்தில் கிரிமினல் புகார் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அவர் தனது புகாரில் கூறியுள்ளதாவது:

கவுதம் கம்பீர் தில்லியில் இரண்டு இடங்களில் வாக்காளர் அடையாள அட்டைகள்  வைத்துள்ளார். தில்லி ராஜேந்திர நகர் மற்றும் கரோல் பாக் என இரண்டு இடங்களில் வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இருக்கிறது.

இதற்கு சட்டப்படி ஓராண்டு வரை சிறைத்தண்டனை கிடைக்க வழியுண்டு. எனவே கவுதம் கம்பீரை தகுதியிழப்பு செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.                  

ஆனால் கவுதம் கம்பீர் தரப்பில் மறுப்பு எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com