லக்னௌ: மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு வழங்கி வரும் ஆதரவை வாபஸ் பெற்று விடுவேன் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் ஆட்சி புரியும் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவளித்து வருகிறது. காங்கிரசுக்கு இங்கு இருப்பது மிக மெல்லிய பெரும்பா ன்மையே ஆகும்.
இந்நிலையில் ம.பி., காங்கிரஸ் அரசுக்கு வழங்கி வரும் ஆதரவை வாபஸ் பெற்று விடுவேன் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கூட்டணியின் சார்பாக குனா தொகுதிக்கு லோகேந்திர சிங் ராஜ்புத் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார்.
அவர் தற்போது மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா முன்னிலையில் காங்கிரஸ் கட்சியின் இணைந்து விட்டார். இதுதொடர்பாக லோகேந்திர சிங் தன்னுடன் இருக்கும் புகைப்படத்தை சிந்தியா ட்வீட் செய்திருந்தார்.
இதனால் அதிருப்தியடைந்த மாயாவதி தனது ட்விட்டர் பக்கத்தில், 'மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் அரசுக்கு வழங்கி வரும் ஆதரவை மறுபரிசீலனை செய்ய உள்ளதாக’ தெரிவித்திருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்!
மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்
நேரம் தவறாமை, நேர்த்தி, தொழிலுக்கு மரியாதை... விஜய் நேர்காணல் -2!

உண்மையில் ரோபோ வாக்யூம் க்ளீனர்களை வாங்கலாமா? மீம்ஸ்களால் குழப்பம்
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



