இந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

உ.பியில் பத்திரிக்கையாளர் மற்றும் அவரது சகோதரர் கொலை!

உத்தரப்பிரதேசத்தில் பத்திரிக்கையாளர் மற்றும் அவரது சகோதரர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார்.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2019, 10:47 am

IANS

உத்தரப்பிரதேசத்தில் பத்திரிக்கையாளர் மற்றும் அவரது சகோதரர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சஹாரன்பூர் என்ற பகுதியைச் சேர்ந்த ஆஷிஷ் ஜன்வானி,  'டெய்னிக் ஜக்ரன்' என்ற ஹிந்தி பத்திரிகையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், ஆஷிஷ் மற்றும் அவரது சகோதரரும் இன்று மர்மமான முறையில் வீட்டில் இறந்த நிலையில் கிடந்தனர். பின்னர் இது தொடர்பாக, காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஆஷிஷ் வசித்து வரும் தெருவில் மஹிபால் என்பவர் பால் விற்பனையாளராக இருக்கிறார். இவர், மாடுகளின் சாணங்களை ஆஷிஷின் வீட்டின் அருகே தொடர்ந்து கொட்டி வந்ததால், ஆஷிஷ் மற்றும் மஹிபாலுக்கும் இடையே தொடர்ந்து சண்டை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. எனவே, மஹிபால் இந்த கொலையை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். 

இந்த இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பாக விசாரிக்க போலீசார் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஆஷிஷின் கொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அவரது பெற்றோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.