மீரட்: உத்தரப்பிரதேசம் மாநிலம் மீரட்டில், பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான பெண் வீட்டில், குற்றம்சாட்டப்பட்டவர்கள் மிரட்டல் நோட்டீஸ் ஒட்டிச் சென்றது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
எங்களுக்கு எதிரான வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்துக்குச் சென்றால், உன்னாவ் பெண்ணுக்கு நேர்ந்ததை விட மிகக் கொடூரமான முடிவு ஏற்படும் என்று ஹிந்தியில் டைப் செய்து பிரிண்ட் எடுத்து, பெண்ணின் வீட்டுச் சுவரில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஒட்டிச் சென்றுள்ளனர்.
ஏற்கனவே, இந்த வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜராகச் சென்ற, அப்பெண்ணை, குற்றம்சாட்டப்பட்டவர்கள் கடுமையாக தாக்கியதில், அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு தில்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அப்போது அவரால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாமல் போனதாகவும் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை கூறியுள்ளார்.
ஏற்கனவே, உன்னாவ் மாவட்டத்தில் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான பெண்ணை, குற்றம்சாட்டப்பட்டவர்கள் எரித்துக் கொன்ற சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், அதைச் சொல்லி மீரட்டில் தற்போது குற்றம்சாட்டப்பட்டவர்கள் பாலியல் பலாத்காரத்தக்கு உள்ளான பெண்ணை மிரட்டியுள்ளனர் என்பது மக்களை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஈரானின் 304 ஏவுகணைகளை அழித்தது ஐக்கிய அரபு அமீரகம்!
மேற்காசிய பதற்றம்: வளைகுடாவிலிருந்து இரு வாரங்களில் 2 லட்சம் பயணிகள் தாயகம் திரும்பினர்!

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
வர்த்தக வாகனங்களின் விலையை 1.5% உயர்த்தும் டாடா மோட்டார்ஸ்!
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

