புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

தில்லி மெட்ரோ ரயில் சேவை இன்று வழக்கம்போல் இயங்கும் என அறிவிப்பு

தில்லியில் 15 மெட்ரோ ரயில் நிலையங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்படுவதாக தில்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது. 

News image
Updated On :16 டிசம்பர் 2019, 2:38 am

DIN

தில்லியில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போராட்டத்தின்போது மாணவா்களுக்கும், போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

இதன் காரணமாக தில்லியில் 15 மெட்ரோ ரயில் நிலையங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்படுவதாக தில்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது. தில்லி போலீஸாரின் அறிவுறுத்தலின்பேரில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திங்கள்கிழமை வழக்கம்போல் திறக்கப்பட்டு, அனைத்து ரயில் சேவைகளும் இயங்கும் என தில்லி மெட்ரோ நிர்வாகம் அறிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.