நாட்டின் பொருளாதார நிலை வீழ்ச்சியடையும் போது, பங்குச்சந்தைகள் மட்டும் எவ்வாறு உயர்கிறது என்று மத்திய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அகமதாபாத் ஐ.ஐ.எம்-இல் 'நிதி, பொருளாதாரம் மற்றும் மார்க்கெட்டிங் ஆராய்ச்சிக்கான தேசிய பங்குச்சந்தை மையத்தை திறந்து வைத்து பேசிய அரவிந்த் சுப்பிரமணியன், 'இந்த மையத்தின் முதல் திட்டம்(ப்ராஜெக்ட்), நாட்டின் பொருளாதாரம் குறித்து இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
நாட்டில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து கொண்டே இருக்கிறது; அதே நேரத்தில் பங்குச்சந்தை உயருகிறது. பொருளாதாரம் வீழ்ச்சியடையும் சமயத்தில் பங்குச்சந்தை மட்டும் உயரக் காரணம் என்ன? இதனை ஆராய்ச்சி செய்து இந்த மையம் விளக்கம் அளிக்கும் என்று நான் நம்புகிறேன். எனக்காக இந்த புதிருக்கு நீங்கள் விடைகாண வேண்டும். அது கண்டுபிடிக்கப்பட்டால் நான் அமெரிக்காவில் இருந்து எந்த நேரத்திலும் இங்கு வருவேன்.
இந்தியாவில் பங்குச்சந்தைகள் போன்ற எனக்கு புரியாத வேறு பல விஷயங்கள் உள்ளன. ஆனால், இந்தியா பொருளாதாரத்தில் மந்தநிலையை எதிர்கொள்கிறது என்பது மட்டும் உண்மை' என்று பேசியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்

வெள்ளிச்சுடரே.... இரண்டு வானம் முதல் பாடல்!

குடும்பக் கதையில் நடிக்கும் கவின்!

அயோத்தி இயக்குநர் இயக்கத்தில் விஜய் ஆண்டனி!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


