ஹைதராபாத் அருகே மெட்செல் எனும் பகுதியில் வாகன பழுது நீக்கும் மையத்தில் அமைந்துள்ள குழியில் விழுந்து சின்தா அஞ்சய்யா (4) ஞாயிற்றுக்கிழமை மாலை உயிர் இழந்தான்.
வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நேரிட்டது. அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பின் சிசிடிவி கேமராவில் இச்சம்பவம் பதிவாகியுள்ளது.
வாகனப் பழுது நீக்கத்துக்காக தோண்டப்பட்ட குழியை முறையாக மூடாமல் இருந்த அந்த தனியார் மையத்தின் அலட்சியத்தால் சிறுவனின் மரணம் ஏற்பட்டதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
முன்னதாக விளையாடச் சென்ற தங்களது மகனை சுமார் ஒரு மணி நேரமாக காணவில்லை என்பதால் தேடிய பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதே சமயம், ஒரு குழந்தையின் உடல் குழியில் இருப்பதாக தகவலறிந்து, போலீஸாருடன் அங்குச் சென்றபோது, தங்கள் மகன் உயிரிழந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார்

வெள்ளிச்சுடரே.... இரண்டு வானம் முதல் பாடல்!

குடும்பக் கதையில் நடிக்கும் கவின்!

அயோத்தி இயக்குநர் இயக்கத்தில் விஜய் ஆண்டனி!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


