புது தில்லி: 16 முதல் 18 வயதுள்ளவர்களுக்கு இனி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஓட்ட லைஸென்ஸ் வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
தற்போது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடரின் போது மக்களவையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஓட்ட லைசென்ஸ் வழங்குவது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய சாலை போக்குவரத்துத்துறையின் சார்பாக எழுத்துப்பூர்வமாக அளிக்கப்பட்ட பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்தியாவில் 16 வயது நிரம்பியவர்களுக்கு 15 சிசி என்ஜின் திறனுக்கு கீழுள்ள எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஓட்டுவதற்கு லைசென்ஸ் வழங்க ஏற்கனவே விதிமுறைகள் உள்ளது. ஆனால் தற்போது அத்தகைய ஸ்கூட்டர்கள் எதுவும் இந்தியாவில் தயாரிக்கப்படுவதில்லை.
எனவே 16 முதல் 18 வயதுள்ளவர்களுக்கு இனி 4.0 வாட் திறன் உள்ள கியர் இல்லாத எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அல்லது பைக் ஓட்ட லைஸென்ஸ் வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதுதொடர்பாக முன்னரே அத்துறையின் அமைச்சரான நிதின் கட்கரி கருத்துக்களை தெரிவைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இன்றைய செய்திகள் ஜூன் 19 - நேரலை!

போராட்டத்தை இணைந்து முன்னெடுப்போம்- மு.க. ஸ்டாலின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த ராகுல்!

என்னுடைய அப்பாவை நினைத்து பெருமைப்படுகிறேன்! - ஹபீபி படத்தைப் பாராட்டிய தனுஷ்!
ஹாலிவுட்டில் பயிற்சி, அம்மாவின் சிபாரிசு... விஜய் நேர்காணல் - 3!
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



