பிகார் அரசுத் துறை பொறியாளர் தேர்வில் 98.5 சதவீத மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்த 'சன்னி லியோன்' 

பிகார் அரசுத் துறை ஒன்றில் பொறியாளர் பதவிக்கு நடந்த தேர்வில் 98.5 சதவீத மதிப்பெண்களுடன் 'சன்னி லியோன்' என்ற பெயரில் ஒருவர் முதலிடம் பிடித்த சம்பவம் நடந்துள்ளது. 
பிகார் அரசுத் துறை பொறியாளர் தேர்வில் 98.5 சதவீத மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்த 'சன்னி லியோன்' 
Published on
Updated on
1 min read

பாட்னா:   பிகார் அரசுத் துறை ஒன்றில் பொறியாளர் பதவிக்கு நடந்த தேர்வில் 98.5 சதவீத மதிப்பெண்களுடன் 'சன்னி லியோன்' என்ற பெயரில் ஒருவர் முதலிடம் பிடித்த சம்பவம் நடந்துள்ளது. 

பிகார் மாநிலத்தில் பல்வேறு அரசுத்துறைகளிலும் காலிப் பணி இடங்களுக்கு தேர்வுகள் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அதன்படி மாநில பொது சுகாதாரத் துறையின் பொறியியல் பிரிவுக்கு இளநிலைப் பொறியாளர்களை தேர்வு செய்வதற்கான தேர்வு சமீபத்தில் நடைபெற்றது.

இதற்கான முடிவுகள் சமீபத்தில் வெளியாகியது.அப்போது 98.5 சதவீத மதிப்பெண்களுடன் 'சன்னி லியோன்' என்ற பெயரில் ஒருவர் முதலிடம் பிடித்ததாக துறையின் இணைய தளத்தில் தகவல் வெளியாகியுள்ளது. இது சமூக வலைத்தளத்தில் வைரலாகப் பரவியது.

பின்னர் இதுதொடர்பான விசாரணையில் தெரிய வந்ததாவது:

குறிப்பிட்ட பதவிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்ப்பிக்க விரும்பியவர்களில் சிலர் இந்த ஆன்லைன் விண்ணப்ப நடைமுறையில் உள்ள குறைபாடுகளை கிண்டல் செய்யும் விதமாக சன்னி லியோன், 'bvcxzbnnb' உள்ளிட்ட பெயர்களில் பதிவு செய்துள்ளனர். எனவேதான் அந்தப் பெயரில் பதிவு செய்த ஒருவரை முதலிடம் பெற்றவராக இணையதகளம் அறிவித்துள்ளது தெரிய வந்துள்ளது.

அதேசமயம் தனது பெயரில் ஒருவர் பிகார் தேர்வில் முதலிடம் பெற்றதை கிண்டல் செய்து நடிகை சன்னி லியோனும் ட்வீட் செய்திருந்தார்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மாநில கல்வித்துறை அமைச்சர் வினோத் நாராயண் ஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தற்சமயம் நாங்கள் குறிப்பிட்ட தேர்வில் மதிப்பெண்களில் முதலிடம் பிடித்தவர்களின் பெயர்களைத்தான் வெளியிட்டுளோம். எனவே இவர்கள் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டு விட்டார்கள் என்று அர்த்தம் இல்லை. விரைவில் இந்த பதவிக்கு கவுசிலிங் துவங்கும். அப்போது நாங்கள் தேர்வு பெற்றவர்களை உரிய சான்றிதழ்களை கொண்டு வருமாறு கூறி பரிசீலிப்போம். அந்த சமயத்தில் இத்தகைய போலி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.  ஒரு வேளை இந்த பெயரில் நிறைய பேர்கள் இருந்தாலும் இருக்கலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com