உத்தரப் பிரதேச மாநிலம் முசாஃபர்நகர் மாவட்டத்தில் வேறு சமூகத்தைச் சேர்ந்த நபருடன் பழகி வந்த 22 வயது தங்கையை, அவரது அண்ணன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற நிகழ்வு அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசம் முசாஃபர்நகர் மாவட்டம் போபாடா கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதேஷ் குமார் (25). இவரது தங்கை தியானி (22). 4 தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள ஒரு உணவு விடுதிக்கு அதேபகுதியைச் சேர்ந்த வேறு சமூகத்தைச் சேர்ந்த ஆணுடன், தியானி உணவருந்தச் சென்றார்.
அப்போது, அங்கு வந்த 4 பேர் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. ஒருகட்டத்தில், வாக்குவாதம் முற்றி அடிதடியில் முடிந்ததால், சம்பவ இடத்துக்கு போலீஸார் வந்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த விவகாரம், தியானியின் வீட்டில் இருந்தவர்களுக்கு தெரிய வந்தது. தியானி வேறு சமூகத்தை சேர்ந்த நபருடன் பழகி வந்ததை அறிந்த அவரது சகோதரர் ஆதேஷ்குமார், தங்கை தியானியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதையடுத்து, ஆதேஷ்குமார் மீது கொலை வழக்குப்பதிவு செய்த போலீஸார் அவரிடமிருந்து கைத்துப்பாக்கியை
பறிமுதல் செய்தனர். ஆதேஷ்குமார் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திரையரங்குகளில் சாமியாடினால்...! ஆர்.ஜே. பாலாஜி வேண்டுகோள்!

உ.பி. சாலை விபத்து: பலியானவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம் - பிரதமர்

சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் தோனி விளையாடுகிறாரா? அஸ்வின் கூறுவதென்ன?

பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்! பழங்குடியின தலைவர் உள்பட 3 பேர் பலி!
விடியோக்கள்
Instagram மூலம் குழந்தைகளை வைத்து பிரசாரம் செய்த தவெக! - தோல்வி குறித்து M.K. Stalin | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை
