மேகாலயாவின் கிழக்கு ஜெயின்டியா மலைப் பகுதியில் இருந்த சுரங்கத்தில் 15 தொழிலாளர்கள் சிக்கி 17 நாட்களுக்கும் மேல் ஆன நிலையில், தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.
தொடர் மீட்புப் பணிகளுக்கு இடையே, சுரங்கத்தில் சிக்கியிருக்கும் தொழிலாளர்களின் 3 தலைக்கவசங்கள் மட்டுமே நேற்று மீட்கப்பட்டுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த 15 தொழிலாளர்களின் குடும்பத்தினரும், அவர்கள் உயிரோடு இருப்பார்கள் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டோம். அவர்களது உடல்களையாவது மீட்டுக் கொடுங்கள் என்று கண்ணீரோடு கதறுகிறார்கள்.
ஆமை வேகத்தில் நடக்கும் மீட்புப் பணி இன்று 17வது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த மீட்புப் பணிகள் மூலம் தொழிலாளர்கள் உயிரோடு மீட்க முடியாது என்றாலும், அவர்களது உடல்களையாவது மீட்டு வீட்டுக்குக் கொண்டு வர உதவுங்கள் என்பதே அவர்களது முக்கியக் கோரிக்கையாக உள்ளது.
மேகாலயா மற்றும் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த 15 தொழிலாளர்கள் வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் தங்களது குடும்பத்தைக் காப்பாற்றவே இந்த ஆபத்து நிறைந்த சுரங்கப் பணிக்குச் சென்றனர். ஆனால் அதுவே அவர்களுக்கு எமனாகி, தங்களது குடும்பங்களை மீட்கமுடியாத துன்பத்தில் ஆழ்த்திச் சென்றுள்ளது.
ஒவ்வொரு தொழிலாளியின் குடும்பமும் அழுதழுது கண்ணீர் வற்றி கடைசியாக அவர்களது உடலையாவது பார்ப்போமா என்ற கவலையோடு காத்திருக்கிறார்கள். அரசு உதவி செய்தாலொழிய வாழ்வதற்கு வேறு வழியில்லை என்ற நிலையில் ஆதரவற்று நிற்கிறது தொழிலாளர்களின் குடும்பங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார்

வெள்ளிச்சுடரே.... இரண்டு வானம் முதல் பாடல்!

குடும்பக் கதையில் நடிக்கும் கவின்!

அயோத்தி இயக்குநர் இயக்கத்தில் விஜய் ஆண்டனி!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


