/

இரண்டுக்கும் ஒன்றுக்கும் இடையே ஏதேனும் வித்தியாசம் உள்ளதா? பினராயி விஜயன்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 50 வயதுக்குட்பட்ட 3வது பெண் சுவாமி தரிசனம் செய்துவிட்டு வந்ததை கேரள முதல்வர் பினராயி விஜயன் உறுதி செய்துள்ளார்.

News image
Updated On :5 ஜனவரி 2019, 6:30 am


திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் 50 வயதுக்குட்பட்ட 3வது பெண் சுவாமி தரிசனம் செய்துவிட்டு வந்ததை கேரள முதல்வர் பினராயி விஜயன் உறுதி செய்துள்ளார்.

வியாழக்கிழமை சபரிமலைக்கு வந்த இலங்கைப் பெண் சுவாமி தரிசனம் செய்தாரா? இல்லையா? என்ற பெரிய சர்ச்சைக்கு முதல்வர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இரண்டுக்கும் ஒன்றுக்கும் இடையே ஏதேனும் வித்தியாசம் உள்ளதா? 3வது பெண் சுவாமி தரிசனம் செய்ததற்கு எதிராக பாஜக மீண்டும் போராட்டம் நடத்துமா? என்றும் பினராயி விஜயன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐயப்பனை தரிசித்த பெண்கள் யாரும் விமானத்தில் இருந்து கோயிலுக்குள் குதிக்கவில்லை. அவர்கள் சுவாமி தரிசனம் செய்வதை எந்த பக்தரும் தடுக்கவில்லை. பாஜக வேண்டுமென்றே போராட்டங்களை நடத்துகிறது. ஒவ்வொரு பெண்ணும் சபரிமலைக்கு வரும் போதெல்லாம் பாஜக ஒவ்வொரு முறையும் போராட்டங்களை நடத்துமா? என்றும் பினராயி விஜயன் கேட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.