பாட்னா: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறித்த திரைப்படம் தொடர்பாக நடிகர் அனுபம் கெர் உள்ளிட்ட படக்குழுவினர் மீது வழக்குப் பதிவு செய்ய பாட்னா கீழ்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஊடகத் துறை ஆலோசகராக கடந்த 2004 முதல் 2008 வரை இருந்த சஞ்சய் பாரு, தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர் என்ற பெயரில் எழுதிய புத்தகத்தைத் தழுவி இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இதில், பிரபல ஹிந்தி நடிகர் அனுபம் கெர், மன்மோகன் சிங் வேடத்தை ஏற்று நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது, காங்கிரஸின் உட்கட்சிப் பிரச்னைக்கு மன்மோகன் சிங் பலியாகிவிட்டார் என்பது போன்ற பல சர்ச்சைக்குரிய காட்சிகள் அந்த முன்னோட்டத்தில் இடம்பெற்றுள்ளன. இதுதொடர்பாக பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் பரஸ்பரம் குற்றம் சாட்டிக் கொண்டன.
இந்நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறித்த திரைப்படம் தொடர்பாக நடிகர் அனுபம் கெர் உள்ளிட்ட படக்குழுவினர் மீது வழக்குப் பதிவு செய்ய பாட்னா கீழ்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வழக்கறிஞர் சுதீஷ் குமார் ஓஜா என்பவர் கடந்த 2 - ஆம் தேதி அன்று பாட்னா கீழ்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடந்தார். அதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறித்த திரைப்படமான 'தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர்' திரைப்படத்தில் மன்மோகன் சிங் மற்றும் சஞ்சய் பாரு கதாபாத்திரத்தில் நடித்த அனுபம் கெர் மற்றும் அக்ஷய் கண்ணா இருவரும் அவர்களது புகழுக்கு களங்கம் விளைவித்துள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
அந்த மனுவானது செவ்வாயன்று விசாரணைக்கு வந்தபோது நடிகர் அனுபம் கெர் உள்ளிட்ட படக்குழுவினர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டுமென்று பாட்னா கீழ்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிகாரில் மாணவா்கள் மீது ஏ.கே. 47 துப்பாக்கிச்சூடு? ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு பாஜக மறுப்பு

ஆதம்பாக்கம் எம்ஆா்டிஎஸ் ரயில் நிலையத்தில் ரயில்கள் நிற்க உடனடி நடவடிக்கை: ரயில்வே அமைச்சரிடம் தென் சென்னை எம்.பி. கோரிக்கை

சிஜேபி போராட்டம்: தவறான பதிவுகள் குறித்து சமூக ஊடக கணக்குகளுக்கு தில்லி போலீஸ் நோட்டீஸ்

நீட் உயா்நிலைக் குழு ஏமாற்று வேலை: அமைச்சா் வன்னி அரசு
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



