புது தில்லி: செய்தியாளர் ராம்சந்தர் சத்ரபதி கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரகீம் குற்றவாளி என்று பஞ்ச்குல்லா சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பாலியல் பலாத்கார வழக்கில் ‘தேரா சச்சா சவுதா’ என்ற மத அமைப்பின் தலைவரான சர்ச்சைக்குரிய சாமியார் குர்மீத் ராம் ரகீம் சிங் 20 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டு ஹரியாணா மாநிலம் சனாரியா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் செய்தியாளர் ராம்சந்தர் சத்ரபதி கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரகீம் குற்றவாளி என்று பஞ்ச்குல்லா சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சாமியாரின் ஆசிரமத்தில் நடந்த பாலியல் பலாத்கார சம்பவங்களை வெளிக்கொண்டு வந்த செய்தியாளர் ராம் சந்தர் சத்ரபதி என்பவரும் படுகொலை செய்யப்பட்டார். 15 வருடங்களுக்கு முன்னர் பெண் பக்தர்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தொடர்பாக ஆசிரமங்களில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக எழுதிய அவர் படுகொலை செய்யப்பட்டார். இந்நகர்வே குர்மீத் ராமிற்கு எதிரான நடவடிக்கைக்கு தொடக்கப்புள்ளியாக அமைந்தது.
இந்த நிலையில் செய்தியாளர் ராம் சந்தர் சத்ரபதி கொலை தொடர்பாக அவரது மகன் அன்சுல் தொடர்ந்த வழக்கு பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றத்தில் இறுதிக்கட்டத்தை எட்டியது. இந்த வழக்கில்தான் குர்மீத் ராம் ரகீம் சிங்கை கோர்ட் குற்றவாளி என நீதிமன்றம் தற்போது தீர்ப்பு கூறி உள்ளது. தண்டனை விபரம் வருகிற 17 ந்தேதி அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!
தொகுதி நலனுக்காக தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம்

மே 30 - நெல்லை - திருச்செந்தூர் முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம்!

அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெகவில்... ஆரோக்கியமான அரசியலுக்கு ஏற்புடையதல்ல: சிபிஎம் விமர்சனம்!
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy



